Advertisment

மத்திய அமைச்சருக்கு விநாயகர் சிலை பரிசளித்த கே.என்.நேரு… வெடித்த சர்ச்சை!

திமுகவின் மூத்த தலைவர் அமைச்சர் கே.என்.நேரு மத்திய அமைச்சருக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசளித்ததால் சர்ச்சை வெடித்து விவாதமாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
மத்திய அமைச்சருக்கு விநாயகர் சிலை பரிசளித்த கே.என்.நேரு… வெடித்த சர்ச்சை!

திமுகவின் மூத்த தலைவரும் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தபோது அவருக்கு விநாயகர் பரிசளித்தது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சிலையை பரிசளித்ததில் என்ன சர்ச்சை என்று கேள்வி எழுகிறதா? விநாயகர் சிலைகளை உடைத்த பெரியார் வழி வந்த திமுகவில், பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயையும் உடைக்கமாட்டேன் என்று சொன்ன அண்ணாவின் வழிவந்தவர்கள் மத்திய அமைச்சருக்கு பிள்ளையார் சிலையை பரிசளிக்கலாமா என்று கேள்வி எழுப்பி அமைச்சர் கே.என்.நேரு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

Advertisment

திமுகவின் தலைமை நிலைய முதன்மை செயலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக உள்ள கே.என்.நேரு நீர் மேலாண்மை திட்டங்கள் அக்டோபர் 1ம் தேதி மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். அப்போது, கே.என்.நேரு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசளித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் கே.என்.நேரு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைபடங்களை பதிவிட்டு குறிப்பிடுகையில், “மாண்புமிகு முதல்வரின் ஆணைக்கிணங்க மாண்புமிகு ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு.கஜேந்திரசிங் ஷெகாவத் அவர்களை, புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து பேசினேன். அப்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேன்.என்.நேரு, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு விநாயகர் சிலை பரிசளித்ததைப் பார்த்த திமுகவின் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். பிள்ளையார் சிலைகளை உடைத்த பெரியா வழி வந்த திமுகவில், பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன் பிள்ளையாருக்கு தேங்காயையும் உடைக்கமாட்டேன் என்று சொன்ன அண்ணா உருவாக்கிய கட்சியில் ஒரு மூத்த தலைவராக இருந்துகொண்டு இப்படி மத்திய அமைச்சருக்கு விநாயகர் சிலையை பரிசளிக்கலாமா என்று கேள்வி எழுப்பி அமைச்சர் கே.என்.நேரு மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இது குறித்து நாதக ஆதரவாளர் ஒருவர் நெட்டிசன் ஒருவர், “ஒரு நாட்டுக்குப் போனால் அந்நாட்டின் சிறப்பை வெளிப்படுத்தும் பரிசை அவர்கள் விருப்பம் போல் வழங்குவர். வாங்குபவர் விருப்பம் அறிந்து வழங்குவதில்லை. திமுகவிற்கு பெரியார் உடைத்த பிள்ளையார் தான் விருப்பமான சிலை போலுள்ளது.

தமிழக பெருமை கூறும் சிலைகள் பலவிருக்க…” என்று விமர்சித்து #சீமான் சொல்வது சரிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நெட்டிசன் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுகு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாய் பாபா பரிசளித்ததைக் குறிப்பிட்டு இவர் சாய்பாபா தமிழரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மநீமவைச் சேர்ந்த மய்யம் சுப்பிரமணியன் ட்விட்டரில் குறிப்பிடுகையில், “திராவிட செம்மல், பெரியாரின் வழி தோன்றல், ரெட்டியார் சங்கத்தின் காப்பாளர், பிள்ளையார் என்ன பெருமாள் சிலையே கொடுப்பார்கள். இதெல்லாம் மார்க்கெட்டிங் தந்திரம்பா. இவங்கெல்லாம் அரசியல் வியாபாரிங்கப்பா.” என்று அமைச்சர் கே.என்.நேருவை கடுமையாக விமர்சித்துள்ளர்.

மற்றொரு நெட்டிசன், “ஹிந்து தெய்வங்களை விமர்சனம் செய்து வருவது திமுக குரூப்ஸ். விநாயகர் சிலையை மத்திய அமைச்சருக்கு பரிசீலிப்பது திமுக குரூப்ஸ். காரியம் ஆகவேண்டும் என்றால் காலில் கூட விழுவார்கள் தமிழகத்தில் பேசுவது எல்லாம் அட்டைக்கத்தி தானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனைக் குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக், “பாஜக அமைச்சருக்கு விநாயகர் சிலையை பரிசளித்தார் கே.என்.நேரு! இதுவல்லவா Dravidian Stock?!” என்று கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி, திமுகவின் மூத்த தலைவர் அமைச்சர் கே.என்.நேரு மத்திய அமைச்சருக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசளித்ததால் சர்ச்சை வெடித்து விவாதமாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment