Chennai Tamil News: வடசென்னையில் ஓட்டேரிக்கு அருகில் உள்ள தாதாஷாமகனில் கிடைக்கும் மாட்டிறைச்சியின் தரத்திற்கு நகரத்தில் வேறு எந்தப் பகுதியும் நிகரில்லை என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
தாதாஷாமகன் வாடிக்கையாளர்களுக்கு பலவகையான உணவுப் பொருட்களை வழங்கும் கடைகளில் ஒன்றாகும். வெளியாட்களிடம் சென்னையைப் பற்றி விவரிக்கக் கேட்டால், அவர்கள் கடற்கரைகள், கர்நாடக இசை சபாக்கள், தேவாலயங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் போன்ற வரலாற்று இடங்களை கூறுவார்கள்; உணவு பொருட்களை பற்றி கேட்டால், இட்லி மற்றும் சாம்பார் ஆகியவற்றைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள்.

ஆனால் சென்னையில் மாட்டிறைச்சியின் மையமாக அடிக்கடி குறிப்பிடப்படும் தாதாஷாமகன் சிறந்த உணவை மக்களுக்கு வழங்குகிறது.
தாதாஷாமகன், வட சென்னையில் ஓட்டேரிக்கு அருகில் வசித்து வருகிறார். அவர் வசிக்கும் பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு பலவகையான உணவுப் பொருட்களை வழங்கும் கடைகள் அமைந்துள்ளது.
இவரின் கடையில் கிடைக்கும் மாட்டிறைச்சியின் தரத்திற்கு நகரத்தில் வேறு எந்த கடையும் நிகரில்லை என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். நகரத்தில் உள்ள மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் விலை குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
“எங்கள் முன்னோர்கள் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து இந்த இடத்திற்கு வந்தார்கள். அவருடைய ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்பதற்காக மக்கள் இந்த இடத்திற்கு வரத் தொடங்கினர். அந்த நாட்களில் இங்கு ஆட்சி செய்த நவாப், தாதா பீரின் சேவைகளைப் பற்றி கேள்விப்பட்டு, அவரைச் சந்தித்து அவரது உன்னத குணங்களால் ஈர்க்கப்பட்டு, ஹசரத்திற்கு இந்த நிலத்தை பரிசாக வழங்கினார். தாதா பீரின் சீடர்கள் அவருக்கு சேவை செய்ய அப்பகுதியில் குடியேறத் தொடங்கினர்”, என்று கூறுகிறார்.
“தாதாஷமகன் என்று குறிப்பிடப்பட்ட பகுதி, பின்னர் அது தசமகன் ஆனது. மகான் என்றால் வீடு; தசமகன் என்ற பெயர் தாதா பீரின் வீட்டைக் குறிக்கிறது.
பழங்காலத்தில், தாதா பீரின் சீடர்கள் தர்காவில் உள்ள அவரது கல்லறைக்குப் பின்னால் தீபம் ஏற்றி வைத்தனர். அவர்கள் மறுநாள் வந்து தீபம் ஏற்றுவதற்குப் பயன்படுத்திய எண்ணெய்யை எடுத்துத் தலையிலோ அல்லது நெற்றியிலோ தடவினால் நோய் தீரும் என்று நம்பினார்கள். இப்போதும் மக்கள் இந்த வழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள்” என்கிறார்.
மஸ்ஜித் இ அக்பர் இணைச் செயலாளரான எஸ் ஜியா உல்லா (43), மகான் (மதத் தலைவர்) தாதா பீர் காரணமாக இந்தப் பகுதிக்கு அந்தப் பெயர் வந்தது என்கிறார்.
‘தி ஓல்ட் ஷாப்’ நடத்தும் 43 வயதான இம்ரான், பல்வேறு வகையான மாட்டிறைச்சி பொருட்கள் உள்ளூரில் கிடைக்கின்றன என்று கூறுகிறார்.
“நான்கு தசாப்தங்களாக கடையை நடத்தி வருகிறேன். சீக் கபாப், வெல் கபாப், ஃபால் மற்றும் மாட்டிறைச்சி ஷவர்மா போன்ற சில வகைகள் இங்கு அதிக அளவில் விற்கப்படுகின்றன. எனது தந்தையிடமிருந்து இந்த கடையை நான் பெற்றேன், பல தடைகளை மீறி அதை நடத்தி வருகிறேன். ஆனால் எனது வருங்கால சந்ததி இந்த தொழிலில் தொடருமா என்று எனக்குத் தெரியவில்லை. என் மகன் இப்போது நகரக் கல்லூரியில் கணினி அறிவியலைப் படித்து வருகிறான், அவன் இந்தத் தொழிலை நடத்த விரும்பவில்லை”, என்கிறார் இம்ரான்.
இப்பகுதியில் தரமான மாட்டிறைச்சி கிடைப்பதற்கான காரணத்தை விளக்கும் இம்ரான், “விலங்குகள் இறைச்சிக் கூடத்திற்கு வருவதற்கு முன்பு, கால்நடை மருத்துவர் அவற்றை பரிசோதித்து, இந்த விலங்குகளை சாப்பிடலாம் என்று முத்திரையை வழங்குகிறார். இறைச்சிக் கூடத்தில் இந்த செயல்முறை முடிந்த பிறகு, இறைச்சி கடைகளில் சுத்தம் செய்யப்பட்டு, பின்னர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது”.
‘தி ஓல்ட் ஷாப்’ கடையில் உரிமையாளர் இம்ரான் கூறுகையில், “பல்வேறு வகையான மாட்டிறைச்சி பொருட்கள் உள்ளூரில் கிடைக்கின்றன”.
61 வயதான முகமது சுல்தான், தினமும் சுமார் 80 கிலோ இறைச்சி தங்கள் கடைகளில் பயன்படுத்தப்படுவதாகவும், அதில் சில நகரின் பிற பகுதிகளில் உள்ள கிளைகளுக்கு அனுப்பப்படுவதாகவும் கூறுகிறார். இங்கு கிடைக்கும் இறைச்சி முதன்மையாக மாட்டிறைச்சி என்றும், 10 சதவீதம் மட்டுமே கோழி இறைச்சி என்றும் அவர் கூறுகிறார்.
அவரது தாத்தா 1912 இல் இந்தப் பகுதிக்கு வந்ததாகவும், அவரது குடும்பம் சென்னையின் இந்தப் பகுதியில் தொடர்ந்து வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
“நான் இங்கு 40 வருடங்களாக கடை நடத்தி வருகிறேன். பஸ் டிக்கெட் 10 பைசா இருந்த 1975ல் லத்தீப் பிரியாணி கடையை ஆரம்பிச்சேன். இங்கு சுமார் 52 கடைகள் உள்ளன. காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இங்கு அனைத்தும் கிடைக்கும். இங்கு எல்லாமே ஹலால் ஆகும், புதுச்சேரி, தீவனூர், அச்சரப்பாக்கம், வந்தவாசி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும், ஆந்திராவின் சில பகுதிகளில் இருந்தும் கால்நடைகள், கோழிகள் வருகின்றன.
எங்களுடைய செலவுகளை நாம் நிர்வகித்து, வியாபாரத்தை தொடர்ந்து நடத்த முடியும் என்றாலும், மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் – இதை நான் எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் கூடச் சொல்கிறேன் – எல்லோரும் இங்கு வெற்றி பெறுவதில்லை. பலர் தங்கள் வருமானத்தை இழந்துள்ளனர், பலர் வேறு வேலைகளை எடுத்துக்கொண்டு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
இப்போதெல்லாம், அதிகாரிகளால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, அவை எங்கள் வணிகத்தை பாதிக்கின்றன, ”என்று அவர் கூறுகிறார்.
லத்தீஃப் பிரியாணி கடை 1975 இல் நிறுவப்பட்டது. இந்துக்கள் உட்பட பல முஸ்லீம் அல்லாத மக்கள் மாட்டிறைச்சியை உட்கொள்ளத் தொடங்கியதால் மாட்டிறைச்சி பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக சுல்தான் மேலும் கூறுகிறார்.
“வருடம் முழுவதும் வணிகம் நடக்கிறது, இங்குள்ள ஒவ்வொரு கடைக்கும் ஒரு நாளைக்கு 150 பேர் வருகிறார்கள். சில கடைகள் அதிக வாடிக்கையாளர்களைப் பெறுகிறார்கள். பலர் நகரத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்குச் செல்லும்போது, தங்களுக்குப் பிடித்தமான உணவு பொருளைப் பார்சலாக வாங்குவதற்கு, தஷாமகனில் உள்ள கடைகளுக்குச் செல்வார்கள்,” என்கிறார் சுல்தான்.
தாதா பீரின் பிறந்தநாளின் போது முழுப் பகுதியும் பண்டிகை மனநிலையில் இருக்கும் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். பிற பகுதிகளில் இருந்தும் கூட மகானின் ஆசீர்வாதத்தைப் பெற திருவிழாவின் போது இந்த இடத்திற்கு வருவார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
தாதாஷாமகனில் வசிக்கும் 56 வயதான ரஹீமா, நிசார் மாட்டிறைச்சி கடையில் ஆறு ஆண்டுகளாக பணிபுரிகிறார், அவர் இறைச்சி வெட்டுவது, அவற்றை சுத்தம் செய்வது மற்றும் கடையை பராமரிப்பது முதல் அனைத்து வகையான வேலைகளிலும் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்.
இங்கு கிடைக்கும் மாட்டிறைச்சியின் தரம் நகரின் மற்ற பகுதிகளில் இல்லை என்று அவர் கூறுகிறார். இங்கு விற்கப்படும் மாட்டிறைச்சியை விரும்புவதால் மதுரை, சிவகாசி போன்ற பிற பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு அடிக்கடி வந்து செல்வதாக கூறுகிறார்.
20 வயதான நிர்மல் நாராயணன் கூறுகையில், “மாட்டிறைச்சி ஒரு ஆரோக்கியமான உணவு மற்றும் பல நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. வாரத்திற்கு மூன்று முறையாவது மாட்டிறைச்சி சாப்பிடுவேன். இப்பகுதி மிகவும் சுகாதாரமாக உள்ளது. கோவிட் -19 காலத்திலும் கூட, இங்குள்ள இறைச்சியின் தரம் காரணமாக இந்த இடம் பரபரப்பாக இருந்தது,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
தாதாஷாமகனில் வசிக்கும் 56 வயதான ரஹீமா, நிசார் மாட்டிறைச்சி கடையில் ஆறு ஆண்டுகளாக பணிபுரிகிறார், அவர் இறைச்சி வெட்டுவது, அவற்றை சுத்தம் செய்வது மற்றும் கடையை பராமரிப்பது முதல் அனைத்து வகையான வேலைகளிலும் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்.
“எனது நண்பர்களை இங்கு பிரியாணியை ருசிக்கச் சொன்னவுடன், அவர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம், ஒரு தட்டில் பிரியாணி சாப்பிட தசமகனுக்குச் செல்வதுதான் அவர்களின் முதல் திட்டம். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இங்கு வருவேன். இங்குள்ள மாட்டிறைச்சி பிரியாணியின் தரத்தை வெளியில் எப்போதும் ஒப்பிட முடியாது,” என்கிறார் பாபு பிரியாணியின் வாடிக்கையாளர்.
மற்றொரு வாடிக்கையாளர் பாஸ்கரன், தனது மகன் ஹரி கணேஷுடன் தனது ஆர்டருக்காக ஒரு கடைக்கு வெளியே காத்திருந்தார், தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, மாட்டிறைச்சி சாப்பிட விரும்புவதாகவும், அதனால் தான் இந்த இடத்திற்கு அடிக்கடி வருகிறேன் என்றும் கூறுகிறார். “இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று எங்களுக்குத் தெரியும், எனவே நாங்கள் இங்கே சாப்பிடுகிறோம்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil