கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சமும், கருணைத் தொகையாக ரூ.10 லட்சமும், சிறப்பு நிகழ்வாக அரசுப் பணி வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: சென்னை மாவட்டம், பெரம்பூர் வட்டம், மீனாம்பாள் சாலை, சிட்கோ நகர் மெயின் ரோடு சந்திப்பு, கவியரசு கண்ணதாசன் நகரில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான உணவகத்தில், 15.7.2017 அன்று நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், மூடியிருந்த உணவகத்தில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், சுமார் 48 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியையும், இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பலனின்றி தீயணைப்புத் துறை வீரர் ஏகராஜ் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
பணியிலிருக்கும்போது காலமான ஏகராஜின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க சென்னை மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் உயரிழந்த ஏகராஜ் குடும்பத்தினரை நான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். மேலும், கீழ்பாக்கம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு உயரிய சிகிக்சையை அளிக்குமாறு மருத்துவமனை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஏகராஜ் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சமும், கருணைத் தொகையாக ரூ.10 லட்சமும், ஆக மொத்தம் ரூ.13 லட்சம் மற்றும் சிறப்பு நிகழ்வாக அரசுப்பணி வழங்கவும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Kodungaiyur fire accident tn cm announced rs 13 lakhs releif fund for fire tender who losses his life
அரசியலை விட்டு விலகுகிறேன், தொண்டர்களுக்கு நன்றி! – சசிகலா அறிவிப்பு
எம்ஜிஆர் குரல்… எம்ஜிஆர் வேடம்… நடிகை லதா! விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வீடியோ
ஜேஇஇ மெயின்: மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்ப செயல்முறை தொடங்கியது
நீச்சல் குளம்… கலர்ஃபுல் பிகினி… காலை உணவு! டிடி கொண்டாட்ட வீடியோ
அப்பார்ட்மென்ட் வாசிகளும் மாடித் தோட்டம் அமைக்கலாம்: இதைப் படிங்க!
பாஜகவுக்கு வீழ்ச்சி… ஆம் ஆத்மிக்கு எழுச்சி! டெல்லி இடைத்தேர்தல் உணர்த்துவது என்ன?