Advertisment

கூட்டணி கட்சிகளுக்கு சீட் வழங்கியது ஏன்?... செந்தில் பாலாஜியை கோவை திமுகவினர் முற்றுகை

திமுகவினருக்கு சீட் வழங்காமல் கூட்டணி கட்சிகளுக்கு இடம் வழங்கியதாகக்கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் காரை திமுகவினர் முற்றுகை

author-image
WebDesk
New Update
Tamil Nadu Minister Senthil Balaji talked about Velumani Arrest

Kovai DMK members protest against minister Senthil Balaji for election issue: கோவை மாநகராட்சி தேர்தலில் திமுகவினருக்கு சீட் வழங்காமல் கூட்டணி கட்சிகளுக்கு இடம் வழங்கியதாகக்கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் காரை திமுகவினர் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதியே தொடங்கிவிட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய முக்கிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இதில், திமுக அதன் கூட்டணிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தலைமை அல்லது பொறுப்பாளர்கள் மூலமாக மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, கோவை மாநகராட்சியின் வெற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் கடந்த சில மாதங்களாக கோவையைச் சுற்றி சுழன்று களப்பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில், திமுகவினருக்கு சீட் வழங்காமல் கூட்டணி கட்சிகளுக்கு இடம் வழங்கியதாகக்கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் காரை திமுகவினர் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட உபகரணங்களை திறந்துவைக்க அமைச்சர் செந்தில் பாலாஜி வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து அவர் காரில் திரும்பி சென்று கொண்டிருந்தபோது திமுகவினர் சிலர் அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டு திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக மருத்துவமனையில் இருக்கும் மூன்று வாயில்களிலும் திமுகவினர் சூழ்ந்துகொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து பேச காத்திருந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இதன்பின்புதான் அமைச்சர் செந்தில்பாலாஜி செல்லும் வாகனம் செல்லும் முன்பாக கூடிய திமுகவினர் சொந்த கட்சியினருக்கு அப்பகுதியில் சீட் வழங்காமல் கூட்டணி கட்சிக்கு சீட் வழங்கியதை கண்டித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். போலீசார் விரைந்து கூட்டத்தை கலைந்து போக செய்தனர். இதையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் ஏதும் சொல்லாமல் வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் காரை சொந்தக் கட்சியினரே முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

V Senthil Balaji Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment