Advertisment

120 தனியார் தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம்: கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற கொண்டாட்டம்

2023 "புத்தாண்டை வரவேற்கும் வகையில் கோவையில் உள்ள சுமார் 120 தனியார் தங்கும் விடுதிகளிலும் - 10 நட்சத்திர ஓட்டல்களிலும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
120 தனியார் தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம்: கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற கொண்டாட்டம்

2023 "புத்தாண்டை வரவேற்கும் வகையில் கோவையில் உள்ள சுமார் 120 தனியார் தங்கும் விடுதிகளிலும் - 10 நட்சத்திர ஓட்டல்களிலும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

போலீசார சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதில் இன்று இரவு 10 மணிக்கு மேல் கோவை மாநகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

publive-image

மேலும் இரவு முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கும்,  பாதுகாப்புப் பணிகளில் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,  மது போதையில் வாகனங்களை இயக்குவோா், வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் விதித்துள்ளார்.

publive-image

அதேபோன்று தனியார் தங்கும் விடுதிகளைப் பொறுத்தவரையில் இரவு 1 மணி வரையிலும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவா்கள் நள்ளிரவு 12 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் இந்த ஆண்டு போலீசாருடன் இணைந்து சுகாதாரத் துறையினரும் புத்தாண்டு இரவுப் பணியில் ஈடுபடுகின்றனா்.

publive-image

இதற்காக கோவை மாநகரில் உள்ள 15 போலீஸ் நிலையங்களிலும் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 3 மணி வரை சிறப்பு மருத்துவ மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு மருத்துவ மையங்கள்

கோவையில் ராமநாதபுரம் சந்திப்பு, டி.பி. சாலை சந்திப்பு, புரூக்பீல்டு, வடகோவை, அவினாசி சாலை, கொடிசியா, கோவைப்புதூா் ஆகிய பகுதிகளில் இந்த சிறப்பு மருத்துவ மையங்கள் செயல்படும். விபத்துகளில் சிக்குவோர், மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவோா் உள்ளிட்டோருக்கு மருத்துவ உதவி அளிக்கும் வகையில் இந்த சிறப்பு மருத்துவ மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடகோவை, லட்சுமி மில் சந்திப்பு, பீளமேடு உள்பட பல்வேறு  இடங்களில் போலீசார் முகாம் அமைத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை பிடித்து  அறிவுரை வழங்க உள்ளனர்.கோவை மாநகராட்சி சார்பில் வாலாங்குளம்  பகுதியில் 12 மணி அளவில் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டை வரவேற்றனர்.இதில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொண்டனர்.

publive-image

2023"ஆண்டு ஆங்கில புத்தாண்டை ஒட்டி கோவை டவுன்ஹால்  பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் புத்தாண்டை  முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை  நிகழ்வானது நடைபெற்றது. 

publive-image

இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்வானது நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெற்றது. இதேபோல கோவை நகரில் உள்ள பெரும்பாலான தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்றது. பொதுமக்கள் பாதுகாப்புக்காக  ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான்.கோவை

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment