புத்தாண்டு கொண்டாட்டங்களில் இருசக்கர வாகனங்கள் ஒட்டி வரும் இளைஞர்களின் விபரீத சாகசங்கள்.
கோவையில் புத்தாண்டு இரவு அன்று கொண்டாட்டம் என்ற பெயரில் வாகனத்தை அபாயகரமாகவும் அதிவேகமாகவும், மது அருந்திவிட்டும் ஓட்டுபவர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கோவை மாவட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பணிகளில் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் சாலைகளில் பாதுகாப்பு பணியில் இல்லாத இடங்களில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்றனர். இதனிடையே வாகனத்தில் சென்ற இளைஞர்கள் சிறுசிறு காயங்களுடன் விபத்துக்குள்ளாயினர். இவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

செய்தி: பி.ரஹ்மான்.கோவை