Advertisment

கிருஷ்ணகிரியையும் விட்டு வைக்காத கொரோனா.... ஆரஞ்சில் இருந்து சிவப்பிற்கு மாறிய அரியலூர்!

கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர் உட்பட 5 பேருக்கு, 144 தடை உத்தரவை மீறி நோய் பரவும் வகையில் செயல்பட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கிருஷ்ணகிரியையும் விட்டு வைக்காத கொரோனா.... ஆரஞ்சில் இருந்து சிவப்பிற்கு மாறிய அரியலூர்!

Krishnagiri confirmed first corona case ariyalur turns red zone again : கொரோனா வைரஸ் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவ, கிருஷ்ணகிரியில் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் பச்சை மண்டலமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருக்கும் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் படிக்க : எஸ்.பி.ஐ அதிகாரிக்கு கொரோனா: தனிமைப்படுத்தலில் வங்கி ஊழியர்கள்

அவருடன் பயணித்த 3 நபர்கள் மற்றும் அவர்கள் உறவினர்கள் 8 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே போன்று நேற்று அரியலூர் மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் இருந்து சரக்கு வண்டியில் தங்களின் சொந்த ஊர் திரும்பினர் அரியலூரை சேர்ந்த 40 நபர்கள். அந்த 40 நபர்களில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் ரெட் ஸோனுக்கு மாறியது அரியலூர்.

மேலும் படிக்க : தமிழகத்தில் சிவப்பு மண்டலங்கள் எண்ணிக்கை குறைகிறது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர் உட்பட 5 பேருக்கு, 144 தடை உத்தரவை மீறி நோய் பரவும் வகையில் செயல்பட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Coronavirus Krishnagiri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment