Advertisment

சேப்பாக்கத்தில் களம் இறங்கிய கிருத்திகா உதயநிதி: குடிசைப் பகுதி குழந்தைகளுக்கு யோகா, விளையாட்டு கற்றுக் கொடுக்க ஏற்பாடு

பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவது தற்போது அதிகரித்து வருகிறது என்றும், பள்ளிகளில் குழந்தைகளுக்கு நடக்கும் பிரச்சனைகளை பெற்றோர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்றும் கிருத்திகா உதயநிதி கூறியுள்ளார்

author-image
WebDesk
New Update
சேப்பாக்கத்தில் களம் இறங்கிய கிருத்திகா உதயநிதி: குடிசைப் பகுதி குழந்தைகளுக்கு யோகா, விளையாட்டு கற்றுக் கொடுக்க ஏற்பாடு

Krithika Udhayanidhi arrange yoga class for children in Chepauk: சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள குடிசை பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்கு யோகா, விளையாட்டு போன்ற ஆற்றலை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இதன்மூலம் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றும் கிருத்திகா உதயநிதி கூறியுள்ளார்

Advertisment

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில், சைல்டு அடோலெசென்ட் பவுண்டேஷன் இந்தியா என்கிற தன்னார்வ அமைப்பு சார்பில், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிருத்திகா உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய கிருத்திகா உதயநிதி, ”பிள்ளைகளுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்முடைய விருப்பங்களை அவர்கள் மீது திணிக்க கூடாது. பிள்ளைகளின் விருப்பத்தை தெரிந்து அவர்களை வளர்க்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள குடிசை பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்கு யோகா, விளையாட்டு போன்ற ஆற்றலை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இதன்மூலம் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றும் கிருத்திகா உதயநிதி தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருத்திகா உதயநிதி, பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று, ஒரு பெண் படித்தால் மட்டுமே அவளுடைய குடும்பத்தை நல்வழியில் எடுத்துச்செல்ல முடியும் என்று கூறினார்.

மேலும், பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்படுவது தற்போது அதிகரித்து வருவதாக கூறிய அவர்,  பள்ளிகளில் குழந்தைகளுக்கு நடக்கும் பிரச்சனைகளை பெற்றோர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்றும், அதுபோன்று பெற்றோர்கள் கேட்டகாததால் தான் குழந்தைகள் தவறான முடிவுகளை எடுப்பதாகவும் கூறினார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment