இந்து மதத்தை தூக்கி பிடிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான் – கே.எஸ். அழகிரி

இந்து மதத்தை தூக்கி பிடிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான் எனவும் – காங்கிரஸ் இந்து மதத்துக்கு எதிரானது எனக் கூறுபவர்களுக்கு மாலைக்கண் உள்ளது எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இந்து மதத்தை தூக்கி பிடிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான் – கே.எஸ். அழகிரி

ரஹ்மான் – கோவை

இந்து மதத்தை தூக்கி பிடிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான் எனவும் – காங்கிரஸ் இந்து மதத்துக்கு எதிரானது எனக் கூறுபவர்களுக்கு மாலைக்கண் உள்ளது எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று மாலை திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கெ.எஸ். அழகிரி கூறியதாவது:

நூல் விலை ஏற்றம் காரணமாக விசைத்தறிவு வைத்திருப்போர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்கள் எனவும்.

மேலும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு விசைத்தறி கூடங்கள் மூடிய நிலையில் தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் நூல் விலை உயர்வு, போல தான் வட இந்தியாவில் நூலில் விலை உயர்வு காரணமாக விசைத்தறிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளது எனவும் இதனால்தான் கோடிக்கணக்கான நபர்கள் வேலையில்லாமல் இருந்து வருகிறார்கள் எனவும் பேசிய அவர், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களுக்கு வரி அதிகரித்துள்ளது எனவும் குற்றம் சாட்டினர்.

இரண்டு ரூபாய்க்கு காங்கிரஸ் அரசு அரிசி வழங்கியது. ஆனால் தற்போது அரிசிக்கு பாஜக அரசு 5% ஜி எஸ் டி வரி போட்டுள்ளது எனவும், இவர்கள் விதித்துள்ள வரி அனைத்துமே ஏழைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது எனவும் அவர் விமர்சித்தார்.

தமிழகத்தில் மின்சார உயர்வுக்கு காரணம் மத்திய அரசின் உதய் திட்டம்தான் காரணம் எனவும், அதிமுக அரசு அதை ஏற்றுக் கொண்டதால் தமிழகத்தில் அத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார். இலவசம் மின்சாரத்தை பொதுமக்களுக்கு தரக்கூடாது என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என விமர்சித்த அவர், அண்ணாமலை ஊசி வெடி போல விளம்பரத்துக்காக குற்றம் சாட்டை கூறி வருவதாகவும் தெரிவித்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்ற முடியும் தருவாயில் தேசிய கீதம் பாடுவதற்கு இந்திய ஒன்றிய நாட்டுப்பண் இசைக்கும் என நெறியாளர் குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கேஎஸ் அழகிரி, யூனியன் என்பதற்கு ஒன்றியம் என்பது தான் பொருள் எத்தனை டிஸ்னரிகளை புரட்டிப் பார்த்தாலும் அதுதான் பதில் என்றார். தேசியக்கொடியை பாஜக தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது எனவும்.

மதத்திற்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் உண்டு ஆனால் தேசியக்கொடிக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை எனவும் கூறிய அவர், பைபிளில் வருவது போல பாஜகவினர் கெட்ட குமாரர்கள் எனவும், அவர்கள் தேசியக் கொடியை பிடித்திருப்பதை இருப்பதாகவும் கூறினார்.

இந்து மதத்தை தூக்கிப் பிடிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் தான் எனவும், இந்து மதத்தை சொந்தம் கொண்டாட வேண்டும் என்றால் அது மகாத்மா காந்தியால் மட்டுமே முடியும் எனவும், காங்கிரஸ் கட்சி அனைத்து மதங்களையும் பிரதிபலிக்கும் விதமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

கோவை கருமத்தம்பட்டி நகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் அதை திமுக கைப்பற்றியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, உள்ளூர் அரசியல் என்பதால் அதை அவர்களே பேசி தீர்த்துக் கொண்டார்கள் என கே.எஸ் அழகிரி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ks alagiri says congress party only for hindu religion

Exit mobile version