Advertisment

ஆரூத்ரா நிதி முறைகேட்டில் அண்ணாமலைக்கு தொடர்பு.. கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

ஆரூத்ரா நிதி முறைகேடு விவகாரத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தி உள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai

KS Alagiri told that Annamalais connection with the founder of Aarudhra Gold

தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு உலகளவில் சரிந்து வருகிறது” என்று கூறினார்.

Advertisment

தொடர்ந்து அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு உலகளவில் சரிந்து வருவதை பார்க்க முடிகிறது.

ராகுல் காந்தியின் குரலை ஒடுக்கும் முயற்சியாக அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். ஆரூத்ரா நிதி முறைகேடு விஷயத்தில் உரிய விசாரணை தேவை.

இந்த விஷயத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும். அந்தப் ஒரு புகைப்படத்தை மட்டும் சாட்சியாக வைத்து நான் கூறவில்லை.

இந்த விஷயத்தில் தமிழக குற்றப் பிரிவு போலீசார் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

அரூத்ரா நிதி நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் நிதி நிறுவன மேலாளர் மைக்கேல் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment