Advertisment

ஹெச்.ராஜா மன்னிப்புக் கேட்பது இருக்கட்டும்; முதலில் விஷால் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.டி.ராகவன்

அப்படி வசூலிக்கப்பட்ட பணத்தை அரசுக்கு செலுத்தாமல் தங்கள் பாக்கெட்டுளை திரை துறையில் சிலர் நிரப்பிக்கொண்டது சட்டவிரோதம் என்பது விஷாலுக்கு தெரியாதா?

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹெச்.ராஜா மன்னிப்புக் கேட்பது இருக்கட்டும்; முதலில் விஷால் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.டி.ராகவன்

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில், சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான விஜய்யின் மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்த்ததாக கூறினார்.

Advertisment

இதற்கு நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் நடிகர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்தார். புதிய படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக பார்த்தேன் என ஒப்புக்கொண்ட ஹெச். ராஜா அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து விஷால் பேசுகையில், "மெர்சல் திரைப்படத்தினை இணையதளத்தில் பார்த்தேன் என ஹெச். ராஜா கூறியது வேதனை அளிக்கிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம். பைரசி எனப்படும் திருட்டு குற்றத்தை அரசுகள், சட்டப்பூர்வமாக ஆக்கிவிட்டதா? பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், ஹெச்,ராஜா மன்னிப்புக் கேட்க வேண்டும் என விஷால் கூறியதற்கு பதில் அளித்துள்ள பாஜகவின் கே டி ராகவன், விஷால் முதலில் இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்கத் தயாரா என சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

1. தமிழத்தில் திரைப்பட கேளிக்கை வரிகள் 30 % ஆக இருந்தது.... ஆனால் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு முழுமையாக இந்த கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.. தமிழ் நாட்டில் பொதுவாக பெரும்பாலான படங்கள் தமிழ் பெயரை வைத்து இந்த வரிவிலக்கை பெற்ற படங்கள் தான்.

2. பொதுவாக அரசின் கேளிக்கை வரியோடு சேர்த்து ஒரு டிக்கெட்டின் விலை 120 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

3. இப்படி இருந்தும் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டும் பல படங்களின் டிக்கெட்டுகளை அதே 120 ரூபாய்க்கு விற்க்கப்பட்டதே இது சட்ட விரோதம் இல்லையா?

4. அப்படி அரசாங்கத்தால் வரிவிலக்கு அளிக்கப்பட்ட படங்களுக்கும் மக்களிடம் கேளிக்கை வரி வசூலிப்பது கிரிமினம் குற்றம் என்பது உங்களுக்கு தெரியாதா?

5. அப்படி வசூலிக்கப்பட்ட பணத்தை அரசுக்கு செலுத்தாமல் தங்கள் பாக்கெட்டுளை திரை துறையில் சிலர் நிரப்பிக்கொண்டது சட்டவிரோதம் என்பது தெரியாதா?

6. இது குறித்து பல சங்கங்களுக்கு தலைவராக உள்ள நீங்கள் வாய் திறந்ததுண்டா?

உங்களை போன்ற நடிகர்களையே தங்களுடைய ஹீரோவாக நினைத்து கொண்டிருக்கும் தமிழக ரசிகர்களிடம் அடிக்கப்படும் இந்த கொள்ளைகளுக்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள்...

என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

H Raja Mersal Vijay K T Raghavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment