குரங்கணி தீ விபத்தில் சிக்கிய 39 பேர் முழு விவரம் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பிய 3 சிறுமிகள்

குரங்கணி தீ விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் முழு விவரம் தெரிய வந்திருக்கிறது. சிலர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குரங்கணி தீ விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் முழு விவரம் தெரிய வந்திருக்கிறது. சிலர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குரங்கணி, தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமம். இங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற ஐ.டி. நிறுவன ஊழியர்கள் உள்பட இரு குழுவினர் காட்டுத் தீயில் சிக்கினர். மார்ச் 11-ம் தேதி மாலையில் இந்தத் தகவல் தெரிந்ததும் மீட்புப் பணிக்கு விமானப் படை அனுப்பி வைக்கப்பட்டது.

குரங்கணியில் வனத் துறையினரும், வருவாய் துறையினரும் முகாமிட்டு விடிய விடிய மீட்புப் பணிகளை கவனித்தனர். இந்த விபத்தில் 9 பேர் பலியானதாக இன்று காலையில் தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்தார். மேலும் பலர் பலத்த தீக் காயங்களுடன் சிகிச்சை பெறுவதால் சாவு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

குரங்கணி விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பட்டியலை அதிகாரிகள் தயார் செய்தனர். இன்று (மார்ச் 12) காலையில் தயாரான அந்த பட்டியலில் இடம்பெற்ற பெயர்கள் வருமாறு:

1.மோனிஷா (வயது 30), க/பெ.தனபால், மடிப்பாக்கம், சென்னை. காயமின்றி மீட்கப்பட்டிருக்கிறார்.

2.பூஜா (27), க/பெ. பியுஸ், வேளச்சேரி, சென்னை, காயமின்றி மீட்கப்பட்டிருக்கிறார்.

3.சகானா (20), த/பெ. கல்யாணராமன், குரோம்பேட்டை, சென்னை. காயமின்றி மீட்கப்பட்டிருக்கிறார்.

4.நிவேதா(23), த/பெ.மோகன்ராஜ், வடபழனி, சென்னை. காயமின்றி மீட்கப்பட்டிருக்கிறார்.

5.விஜயலட்சுமி (27), த/பெ.ரவி, முடிச்சூர், சென்னை. காயமின்றி மீட்கப்பட்டிருக்கிறார்.

இவர்கள் ஐவரும் தீக்காய பாதிப்பு இல்லாதவர்கள்! இவர்கள் தேனி அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

6.இலக்கியா(29), க/பெ.சந்திரன், போரூர், சென்னை, 45 சதவிகித தீக்காயம், தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

7.சுவேதா(28), க/பெ.தினேஷ், பள்ளிக்கரணை, சென்னை, 50 சதவிகிதம் தீக்காயம், தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

8.நிஷா(27), த/பெ.அருள் ஒளி, சென்னை, பலத்த தீக்காயம், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

9.தேவி (28), த/பெ.பழனிசாமி, எடப்பாடி, சேலம் மாவட்டம், பலத்த தீக்காயம், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

10.அனுவித்யா (25), த/பெ.முத்துமாலை, ராஜ கீழ்ப்பாக்கம், தாம்பரம், சென்னை, 90 சதவிகிதம் தீக்காயம், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

11.நிவ்யா பிராக்ராடி(24), த/பெ. கே.கே.ராஜன், நங்கநல்லூர், சென்னை, 60 சதவிகித தீக்காயம், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

12.மினா ஜார்ஜ், கேரளா. 60 சதவிகித தீக்காயம், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

13.திவ்யா(25), த/பெ.ராஜேந்திரன், ஈரோடு, 50 சதவிகித தீக்காயம், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

14.ராஜசேகர்(29), த/பெ/அழகுமுத்து, பூம்புகார், கிழக்கு பல்லடம் சாலை, திருப்பூர், காயம் இல்லை, தேனி அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.

15.பாவனா (12), த/பெ.சரவணன், ராக்கிப்பாளையம் சந்திப்பு, திருப்பூர், காயம் இல்லை, தேனி அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.

16.சாதனா(11), த/பெ.சரவணன், ராக்கிப்பாளையம் சந்திப்பு, திருப்பூர், காயம் இல்லை, தேனி அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.

17.நேகா (9), த/பெ.செந்தில்குமார், ஈரோடு, காயம் இல்லை, தேனி அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.

18.பிரபு (30), த/பெ/தண்டபாணி, காட்டூர், சென்னிமலை, ஈரோடு, பாதிப்பு இல்லை, போடி அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்றார்.

19.சபிதா (35), க/பெ.செந்தில்குமார், ஈரோடு, 10 சதவிகித தீக்காயம், தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

20.கண்ணன் (26), த/பெ. (லேட்) கிரி, கவுண்டம்பாளையம், ஈரோடு, 40 சதவிகிதம் தீக்காயம், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

21.சக்திகலா(40), க/பெ.சரவணன், ராக்கிபாளையம், திருப்பூர், 70 சதவிகித தீக்காயம், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

மீட்கப்படாதவர்கள் பட்டியல்:

22.சதிஷ்குமார்(29), த/பெ.ராமசாமி, கங்காபுரம், சித்தோடு.

23.திவ்யா, க/பெ/விவேக், கவுண்டன்பாடி, ஈரோடு.

24.விவேக், கவுண்டன்பாடி, ஈரோடு.

25.தமிழ்செல்வன், கவுண்டன்பாடி, ஈரோடு.

மற்றும் சென்னையை சேர்ந்த 26.திவ்யா, 27.எஸ்.ரேணு, 28.பார்கவி, 29.சிவசங்கரி, 30.அகிலா, 31.ஜெயாஸ்ரீ, 32.லேகா, 33.ஷ்ரதா ஸ்ரீராமன், 34.ஹேமலதா, 35.புனிதா, 36.சாய் வசுமதி, 37.சுபா, 38.அருண், 39.விபின் ஆகியோர் மீட்கப்படாதவர்கள் பட்டியலில் இடம் பெற்றனர். அதிகாரபூர்வமாக இறந்தவர்களின் பெயர்களை வெளியிடும் முன்பு அதிகாரிகள் தயார் செய்த பட்டியல் இது!

மீட்புப் பணியில் உள்ள அதிகாரிகள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில்
1.விபின்,கோவை
2.அகிலா, சென்னை
3.ஹேமலதா, சென்னை
4.புனிதா, சென்னை
5.சுபா, சென்னை
6.அருண், சென்னை
7.திவ்யா, ஈரோடு
8.விவேக், ஈரோடு

ஆகிய 8 பேர் இறந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். மரணம் அடைந்த மற்றொருவரை அடையாளம் காண முயற்சி நடக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close