”இதே கேள்வியை இன்னும் எத்தனை முறை கேட்பீர்கள்” ட்விட்டரில் விளாசும் குஷ்பு! என்ன காரணம்?

என் இந்தியாவில் இடம் இல்லை என்று சொல்கிறார்கள்

kushboo twitter : சினிமா, சின்னத்திரை, அரசியல் களங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்ரவுண்டர் குஷ்பு. ‘வருஷம் 16’ – ல் தொடங்கிய இவரின் பயணம் இப்போது காங்கிரஸ் கட்சியில் மிக முக்கியமான தமிழக தலைவர் வரை உயர்ந்துள்ளது.

குஷ்புவின் இயற்பெயர் நகத்கான். முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த குஷ்பு சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய பின்பு தனது பெயரை குஷ்பு என மாற்றிக் கொண்டார். அதுமட்டுமில்லை இயக்குனர் சுந்தர் .சி யை திருமணம் செய்துக் கொண்ட பின்பு குஷ்பு இந்து பெண்களை போலவே அலங்காரம் செய்துக் கொள்ளும் பழக்கத்தையும் கடைப்பிடித்து வருகிறார்.

குஷ்பு சினிமாவில் இருந்தவரை இதுக் குறித்த எந்தவித சர்ச்சையும் எழுந்ததில்லை. ஆனால் குஷ்பு அரசியலில் தனது பயணத்தை துவக்கிய நாள் முதல் அடிக்கடி இந்த விமர்சனம் எழுகிறது. அரசியல் ஆதாயத்துக்காக உண்மையான பெயரை குஷ்பு மறைக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு குஷ்பு இதுவரை பல முறை பதில் அளித்தபோதும் இந்த வாக்குவாதம் ஓய்ந்ததாக தெரியவில்லை.

சமீபத்தில் குஷ்பு சுந்தர் என்று இருந்த ட்விட்டர் பக்கத்தை இதற்காகவே KhushbuSundar or NakhatKhan என்றும் அவர் மாற்றிக் கொண்டார். இந்நிலையில் மீண்டும் இதுத் தொடர்பான சிலரின் கேள்விகளுக்கு ட்விட்டரில் விளாசி இருக்கிறார் குஷ்பு.

இதுக்குறித்து அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “ துரதிர்ஷ்டவசமாக திரும்பவும் எனது சுயவிவரத்தை நான் திருத்த வேண்டியுள்ளது. சங்கி ஊமை முட்டாள்கள் அடிப்படையே தெரியாமல் பேசுகிறார்கள். அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் எனக்கு என் நாட்டில் (இந்தியா) இடம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆமாம் நான் ஒரு கான், நான் ஒரு முஸ்லீம் மற்றும் இந்தியா என் நாடு.. இதில் என்ன சந்தேகம்” என்று கூறியிருக்கிறார்.

குஷ்புவில் இந்த பதிவுக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு குரல்கள் ஒலித்து வருகின்றன. இதுப்போன்று ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் சளைக்காமல் பதில் அளித்து வருகிறார் குஷ்பு.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close