லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவம் : கையும் களவுமாக சிக்கிய கொள்ளையன்

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இவ்விரு நபர்களும், பிரபலமான கொள்ளையன் முருகனின் நெருங்கிய வட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இவ்விரு நபர்களும், பிரபலமான கொள்ளையன் முருகனின் நெருங்கிய வட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lalithaa jewellery robbery case viral video leaked

Lalithaa jewellery robbery case viral video leaked

Lalithaa jewellery robbery case viral video leaked :  திருச்சியில் அமைந்திருக்கும் பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த தங்கம், வெள்ளி, ப்ளாட்டினம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக நேற்று காலையில் புதுக்கோட்டையில் 6 நபர்களை காவல்துறை கைது செய்தது. அந்த ஆறு நபர்களும் போர்வை கம்பளி விற்பவர்கள் என்றும், அவர்களுக்கும் இந்த கொள்ளைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கேரள வங்கிக் கொள்ளை ஒன்றில் ஈடுபட்டது தெரிய வந்தது.

Advertisment

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் படிக்க

இந்நிலையில் 7 தனிப்படைகள் அமைத்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது தமிழக காவல்துறை. திருவாரூரில் நேற்று வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுப்பட்ட போது, திருச்சியை சேர்ந்த மணிகண்டன் என்வரிடம் இருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நகையில் இருந்த பார்கோடுகளை சோதனை செய்தபோது அந்த நகைகள் லலிதா ஜூவல்லரி நகைகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. சி.சி.டி.வியில் 2 நபர்கள் பதிவான நிலையில் மற்றொரு நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்ட போது அவர் சீரத்தோப்புவை சேர்ந்த சுரேஷ் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

Lalithaa jewellery robbery case viral video leaked கைது செய்யப்பட்ட மணிகண்டன்

சீராத்தோப்பு சுரேஷ் மற்றும் மணிகண்டன் இருவரும் பிரபலமான கொள்ளையன் முருகனின் உறவினர்கள் என்று தெரியவந்துள்ளது. விசாரணையின் போது மணிகண்டன் தன்னுடைய பங்கினை எடுத்து வந்ததாக கூறியுள்ளார். திருச்சி தனிப்படை காவலர்கள் தற்போது தஞ்சையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி கொள்ளையர்களை பிடிக்க திருவாரூரில் மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை டி.ஐ.ஜி லோகநாதன், திருச்சி டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீராத்தோப்பு சுரேஷின் தாயார் கனகவல்லி உள்ளிட்ட 5 நபர்களிடம் இந்த தனிப்படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மணியிடம் இருந்து கைது செய்யப்பட்ட நகைகள் கைது செய்யப்பட்ட மணியிடம் இருந்து கைப்பெற்றப்பட்ட நகைகள்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: