Advertisment

பத்திரப் பதிவு துறையில் வருவாயாக ரூ.25 ஆயிரம் கோடி இலக்கு-அமைச்சர் மூர்த்தி

திருச்சி, தில்லைநகர், அரசு வணிக வளாகத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

author-image
Vasuki Jayasree
New Update
அமைச்சர் மூர்த்தி

திருச்சி, தில்லைநகர், அரசு வணிக வளாகத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

Advertisment

தில்லைநகர், அரசு வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தில்லை நகர் சார்பதிவகம் பொதுமக்கள் வந்து செல்வதற்கு எளிதாகவும், போக்குவரத்துக்கு வசதி மிகுந்த நகரின் மையப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது.  

தற்போது நடைமுறையிலுள்ள 1ம் எண் இணை சார்பதிவகத்தில் இருந்து செங்குளம், வார்டுAD, வரகனேரி, வார்டு(U), வார்டு(V), வார்டு O(H), வார்டு I(W) ஆகிய 7 கிராமங்களை பிரித்தும் மற்றும் உறையூர் சார் பதிவகத்திலிருந்து தற்போது நடைமுறையிலுள்ள வார்டு K(புத்தூர் வடக்கு), வார்டு Z(புத்தூர் தெற்கு), வார்டு Eநு(புதிய வார்டு Y), வார்டு D(புதிய வார்டு M), தாமலவருபயம் (புதிய வார்டு H), புத்தூர், வார்டு B, (வார்டு G), வார்டு C(வார்டு L),வார்டு I, வார்டு J (உய்யக்கொண்டான் திருமலை), பாண்டமங்கலம் ஆகிய 11 கிராமங்களை பிரித்தும் என, ஆகக்கூடுதலாக 18 கிராமங்களை உள்ளடக்கியதாக புதிதாக உருவாக்கப்பட்டதாக தில்லை நகர் சார்பதிவகம் அமையப்பெற்றுள்ளது.

publive-image

 புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தில்லை நகர் சார்பதிவகம், ஆண்டிற்கு சுமார் 5,000 ஆவணப்பதிவுகள் மூலம் அரசுக்கு சுமார் ரூ.52 கோடி வருவாய் ஈட்டக்கூடியதாகும். இவ்வலுவலகத்தின் மூலம் சுமார் 2,00,000 பொதுமக்கள் பயனடைவர்.

இந்த புதிய அலுவலகத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இந்த திறப்பு விழாவின்போது, அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்ததாவது;    

பத்திரப்பதிவுத் துறையில் கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 8 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. பத்திரப்பதிவு துறைக்கு அரசு ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. வருவாய் இலக்கை அடைவதற்கு ஏதுவாக, அதிகாரிகள் பணியாற்றவேண்டியுள்ளது.   பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் இடையூறு இல்லாமல் பணியாற்ற வசதியாக, இடைத்தரகர்கள், ஆவண எழுத்தர்கள் யாரும் அலுவலகத்திற்குள் வரக்கூடாது என உத்தரவிட்டப்பட்டுள்ளது என்றார்.

publive-image

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், எம்.பழனியாண்டி, துணை பதிவுத்துறை தலைவர் இராமசாமி, உதவி பதிவுத்துறை தலைவர் ராஜா, உதவி பதிவுத்துறை தலைவர் (சரகம்) சுரேஷ்குமார், மாவட்ட பதிவாளர் (தணிக்கை) கார்த்திகேயன், உறையூர் சார் பதிவாளர் உமாதேவி, மாவட்;ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.இராஜேந்திரன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment