Weather News: குடை எடுத்துட்டு போக மறந்துடாதீங்க - லேட்டஸ்ட் வானிலை அறிக்கை
Chennai Weather: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வானிலை குறைந்தது 22 டிகிரி செல்சியசும், அதிகபட்சம் 31 டிகிரி செல்சியசும் இருக்கும்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Advertisment
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
உள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் என்று தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்தது 22 டிகிரி செல்சியசும், அதிகபட்சம் 31 டிகிரி செல்சியசும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.