Advertisment

'இடியுடன் கூடிய மழை' - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Chennai Rains : தென் தமிழகத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'இடியுடன் கூடிய மழை' - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

latest weather news weather updates latest weather report tamilnadu rain chennai rain imd chennai latest report - வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை

Latest Weather News: இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று தனது தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இன்றிலிருந்து (டிச.21-25) அடுத்த நான்கு நாட்களுக்கு பல இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Advertisment

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..

குறிப்பாக, இன்று(டிச.21) தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. தவிர, வரும் டிச.24ம் தேதி அன்றும் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளது.

publive-image

மேலும், தென் தமிழகத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment