தரைமட்டமானது சென்னை சில்க்ஸ் கட்டிடம் (ஆல்பம்)

தீ பிடித்தது. 36 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரிந்த தீயால் கட்டிடம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது.

By: Published: June 20, 2017, 5:06:15 PM

சென்னை சில்க்ஸ் கட்டிடம் தரைமட்டமானது. கட்டிடம் இடிக்கும் பணி முடிவடைந்தது.

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த மாதம் 31ம் தேதி அதிகாலையில் தீ பிடித்தது. 36 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரிந்த தீயால் கட்டிடம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கட்டிடத்தை இடிக்கும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு கட்டிதத்தின் முன் பகுதி இடிந்துவிழுந்தது. ஓரே ஒரு பகுதி மட்டும் இடிக்கப்படாமல் இருந்தது. நேற்றே அதனை இடித்துவிடலாம் என நினைத்தார்கள். மழை உள்பட பல்வேறு காரணங்களால் அது முடியவில்லை. இன்று காலை மீதமுள்ள பகுதியை இடிக்கும் பணி தொடங்கியது. கட்டிடத்தின் அனைத்துப் பகுதிகளும் இடித்து முடிக்கப்பட்டது.

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இப்போது இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Leveled chennai silks building

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X