சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறுவது குறித்த திருத்தங்கள் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தத் தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்தத் திருத்தங்களுக்கு எதிராக சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே. பாலு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை சட்ட திருத்த விதிகளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய இடையூறாக இருக்காது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு அக்.9ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“