திமுக நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து நீக்கம்: ஸ்டாலின் அதிரடி! முழு விவரம்

திமுக நிர்வாகிகளை நீக்கிய ஸ்டாலின்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த 2017 டிசம்பர் 21ம் தேதி நடந்தது. இதில், சுயேட்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் டெபாசிட் இழந்தார். இதையடுத்து, கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் மாவட்டம் வாரியாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார். 3 மாதங்கள் நடந்த இந்த ஆய்வின்போது மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகரச் செயலாளர்கள் மீது சரமாரியாக புகார்கள் கூறப்பட்டன. ஆய்வுக் கூட்டத்தின்போது வைக்கப்பட்ட புகார் பெட்டியில் சுமார் 1 லட்சம் புகார்கள் குவிந்தன. இவற்றை ஆய்வு செய்ய தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் 2 மாவட்டச் செயலாளர்கள், 25 பகுதி, ஒன்றிய, நகரச் செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகளை ஸ்டாலின் அதிரடியாக நீக்கியுள்ளார்.

நிர்வாகிகள் நீக்கப்பட்ட விவரம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து இரா.தமிழ்மணி விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தென்றல் செல்வராஜ் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். அதுபோல, நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பார்.இளங்கோவன் விடுவிக்கப்பட்டு, முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திசெல்வன் நியமிக்கப்படுகிறார்.

பகுதி செயலாளர்கள் விவரம்:

கோவை மாநகர் வடக்கு, தெற்கு மாவட்டங்களில் நீக்கப்பட்டவர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பகுதி செயலாளர்கள் விவரம்.

பி.என்.புதூர்: பி.மணி நீக்கப்பட்டு சண்முகசுந்தரம் நியமனம், பெரியகடைவீதி: செல்வராஜ் நீக்கப்பட்டு, மார்க்கெட் எம்.மனோகரன் நியமனம், காந்திபுரம்: உதயகுமார் நீக்கப்பட்டு ஆர்.எம்.சேதுராமன் நியமனம், பீளமேடு: கார்த்திக் நீக்கப்பட்டு, வே.கோவிந்தராஜ் நியமனம், கவுண்டம்பாளையம்: கே.எம்.சுந்தரம் நீக்கப்பட்டு ஜோதிபாசு நியமனம், சரவணம்பட்டி: சா.மாணிக்கம்(எ) மருதாசலம் நீக்கப்பட்டு எஸ்.பி.லட்சுமணன் நியமனம், குறிச்சி: நா.பிரபாகரன் நீக்கப்பட்டு இரா.உதயகுமார் நியமனம்.

கோவை வடக்கு, தெற்கு, திருப்பூர் வடக்கு, நீலகிரி, ஈரோடு வடக்கு, சேலம் கிழக்கு, மேற்கு, நாமக்கல் கிழக்கு ஆகிய மாவட்டங்களில் நீக்கப்பட்டவர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பகுதி, ஒன்றிய, நகரச் செயலாளர்கள் விவரம்.

ஒன்றிய செயலாளர்கள் விவரம்:

பெரியநாயக்கன்பாளையம்: பத்மாலயம் சீனிவாசன் நீக்கப்பட்டு அ.அறிவரசு நியமனம், பொள்ளாச்சி வடக்கு: கே.பரமசிவம் நீக்கப்பட்டு கோ.பாலகிருஷ்ணன் நியமனம், கோத்தகிரி: செந்தில் (எ) டி.ரங்கராஜ் நீக்கப்பட்டு நெல்லை கண்ணன் நியமனம், நம்பியூர்: எம்.எஸ்.சென்னிமலை நீக்கப்பட்டு ப.செந்தில்குமார் நியமனம், தூக்கநாயக்கன்பாளையம்: டி.கே.சுப்ரமணி நீக்கப்பட்டு எம்.சிவபாலன் நியமனம், மேச்சேரி: ப.செல்வகுமார் நீக்கப்பட்டு எஸ்.சீனிவாசப்பெருமாள் நியமனம், எடப்பாடி: கேஎன்பி நல்லதம்பி நீக்கப்பட்டு மணி (எ) பூவாக்கவுண்டன் நியமனம், அயோத்தியாபட்டினம்: ப.கவுதமன் நீக்கப்பட்டு ஏ.விஜயகுமார் நியமனம், கெங்கவல்லி: ப.காமராஜ் நீக்கப்பட்டு அ.க.அகிலன் நியமனம், தலைவாசல்: ப.லட்சுமணன் நீக்கப்பட்டு க.மணி (எ) பழனிசாமி நியமனம், கொல்லிமலை: கு.காளியப்பன் நீக்கப்பட்டு டி.பாலசுந்தரம் நியமனம், மோகனூர் கிழக்கு: ப.கைலாசம் நீக்கப்பட்டு பி.முத்துசாமி நியமனம், வெண்ணந்தூர்: ஆர்.சத்திய மூர்த்தி நீக்கப்பட்டு ஆர்.எம்.துரைசாமி நியமனம்.

பகுதி, நகர செயலாளர்கள் விவரம்:

வால்பாறை நகரம்: கோழிக்கடை என்.கணேசன் நீக்கப்பட்டு பால்பாண்டியன் நியமனம், திருப்பூர் மாநகரம்: மேங்கோ அ.பழனிசாமி நீக்கப்பட்டு டிகேடிமு. நாகராசன் நியமனம், நல்லூர் பகுதி: க.ரவி நீக்கப்பட்டு ப.கோவிந்தராஜ் நியமனம், வீரபாண்டி பகுதி: க.சின்னசாமி நீக்கப்பட்டு பி.முருகசாமி நியமனம், பல்லடம் நகரம்: ந.ராஜேந்திரகுமார் நீக்கப்பட்டு ம.லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close