Advertisment

Tamil News Today : மாநிலங்களுக்கு எந்த ஜி.எஸ்.டி தொகையும் நிலுவையில் இல்லை - நிர்மலா சீதாராமன்

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Tamil Nadu Latest News 29 March 2022-தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Today : மாநிலங்களுக்கு எந்த ஜி.எஸ்.டி தொகையும் நிலுவையில் இல்லை - நிர்மலா சீதாராமன்

Petrol and Diesel Price: இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிாகரித்து ரூ.105.96 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 67 காசுகள் உயர்ந்து ரூ.96 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

Tamilnadu News Update: மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

வங்கிப் பணிகளும் முடக்கின. இரண்டாவது நாளாக பொது வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது

சென்னை மாநகரை பொறுத்தவரை இன்று 60 சதவீதம் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.

நாடு திரும்பிய முதல்வர்!

“அதிமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித கப்பல்கள் மட்டுமே.. இப்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”என்று துபாயில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், ரூ.6,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

மீனவர்கள் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஊர் காவல்துறை துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

ஐ.பி.எல் அப்டேட்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய (மார்ச் 28) ஆட்டத்தில் லக்னெள அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைடன்ஸ் அணி வீழ்த்தியது.

India news update: உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய இந்திய மாணவர்களை தங்கள் கல்வி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ள விரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

World news update: உக்ரைனில் மரியுபோல் நகரம் போரால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த நகரில் மட்டும் 1.60 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மாதம் கடந்தும் உக்ரைன்-ரஷ்யாவுக்கு இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:42 (IST) 29 Mar 2022
    சென்னை குடிநீர் வாரியத்திற்கான வரியை மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டும் - சென்னை குடிநீர் வாரியம்

    சென்னை குடிநீர் வாரியத்திற்கான வரியை மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டும். அனைத்து பணிமனை வசூல் மையங்களும் நாளையும், நாளை மறுநாளும் இரவு 8 மணி வரை இயங்கும். குடிநீர் வரி, கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை மார்ச் 31-க்குள் கட்ட சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.



  • 20:48 (IST) 29 Mar 2022
    மாநிலங்களுக்கு எந்த ஜி.எஸ்.டி தொகையும் நிலுவையில் இல்லை - நிர்மலா சீதாராமன்

    நிதி மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: “மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை முடிவு செய்வது ஜிஎஸ்டி கவுன்சில் தான், மத்திய அரசு அல்ல. முதலீட்டு செலவினங்களுக்காக சொத்துக்களை உருவாக்க மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.1 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு எந்த ஜி.எஸ்.டி தொகையும் நிலுவையில் இல்லை.” என்று கூறினார்.



  • 20:29 (IST) 29 Mar 2022
    திமுகவை குற்றம் சாட்டினால் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் பேசுகிறார் அண்ணாமலை - ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

    திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி டெல்லியில் பேட்டி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை குற்றம் சாட்டினால் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் பேசுகிறார் என்று விமர்சனம் செய்தார்.



  • 19:12 (IST) 29 Mar 2022
    உக்ரைனில் ராணுவப் படைகளை குறைக்க ரஷ்யா ஒப்புதல்

    உக்ரைனில் கீவ், செர்னிகிவ் பகுதிகளில்

    ராணுவப் படைகளை குறைக்க ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி, இஸ்தான்புல்லில் நடைபெற்ற ரஷ்யா உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தையில் கீவ், செர்னிகிவ் பகுதிகளில் ராணுவப் படைகளை குறைக்க ரஷ்ய தரப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 19:04 (IST) 29 Mar 2022
    'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்திற்கு புதுச்சேரியில் வரிவிலக்கு

    புதுச்சேரியில் 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பாஜகவினர் கோரிக்கையை ஏற்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 19:02 (IST) 29 Mar 2022
    வரிகளை செலுத்த கெடு விதித்த மாநகராட்சி ஆணையர்

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிக்கான வரியை நாளை மறுநாளைக்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.



  • 18:33 (IST) 29 Mar 2022
    ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீஸ்ட் இயக்குநர்

    விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாக வாய்ப்புள்ளது. பீஸ்ட் திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் 'நாளை' என டுவிட்டரில் பதிவு பீஸ்ட் திரைப்படத்தின் டீஸர் நாளை வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்தக்கொண்டிருக்கின்றனர்



  • 18:24 (IST) 29 Mar 2022
    தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்

    தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கரன் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜகண்ணப்பன் தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.



  • 17:44 (IST) 29 Mar 2022
    கழிவறை சுத்தம் செய்த மாணவி : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை

    10ம் வகுப்பு மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய விவகாரத்தில் காஞ்சிபுரம் ஆனம்பாக்கம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பாவதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உததரவிட்டுள்ளார்.



  • 17:42 (IST) 29 Mar 2022
    சேலம், கோவை மாவட்டங்களில் இன்று 100% பேருந்துகள் இயக்கம்

    சென்னையில் இன்று 64.47% அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவுமு், சேலம், கோவை மாவட்டங்களில் இன்று 100% பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.



  • 17:21 (IST) 29 Mar 2022
    81 பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு - டிஸ்பிஎஸ்சி தலைவர்

    7382 காலிப் பணியிடங்களில் 81 பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்? மீதமுள்ள 7,301 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.



  • 16:44 (IST) 29 Mar 2022
    ஜூலை 24இல் குரூப் 4 தேர்வு

    ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் தெரிவித்துள்ளார்.



  • 16:39 (IST) 29 Mar 2022
    ஜூலை 24இல் குரூப் 4 தேர்வு

    ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் தெரிவித்துள்ளார்.



  • 16:36 (IST) 29 Mar 2022
    ஜூலை 24இல் குரூப் 4 தேர்வு

    ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் தெரிவித்துள்ளார்.



  • 16:35 (IST) 29 Mar 2022
    விருதுநகர் பாலியல் வன்கொடுமை - 6 நாட்கள் விசாரிக்க அனுமதி

    விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரை 6 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சிபிசிஐடி 7 நாள் விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் 6 நாட்களுக்கு அனுமதி



  • 16:07 (IST) 29 Mar 2022
    ஜம்மு-காஷ்மீரில் வெளி மாநிலத்தவர் 34 பேர் சொத்துக்களை வாங்கியுள்ளனர்

    ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெளி மாநிலத்தவர் 34 பேர் சொத்துக்களை வாங்கியுள்ளனர் என மக்களவையில் மத்திய அரசு தகவல்



  • 15:36 (IST) 29 Mar 2022
    உக்ரைனின் ராணுவத்தின் திறன் குறைய தொடங்கியது - ரஷ்யா தகவல்

    உக்ரைனின் ராணுவத் திறன் மிகவும் மோசமாகிவிட்டதாகவும், அவர்களிடம் விமானப்படை இல்லை என்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



  • 15:27 (IST) 29 Mar 2022
    புதிய துணைவேந்தராக குமார் நியமனம்

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் ஜே.குமாரை நியமித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.



  • 15:00 (IST) 29 Mar 2022
    லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை.. உ.பி. அரசு பதில் மனு!

    லக்கிம்பூர் சம்பவத்தில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரபிரதேச அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியபோது ஆட்சேபிக்கவில்லை என்ற மனுதாரரின் கருத்தை ஏற்க முடியாது என்று உ.பி.அரசு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:51 (IST) 29 Mar 2022
    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

    கொடைக்கானல் வட்டக்கானலில் இருந்து வனப்பகுதி வழியாக சாலை அமைக்க தடை கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை அலுவலரை பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.



  • 14:50 (IST) 29 Mar 2022
    கனரக மின் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு!

    கடந்த 3 வருடங்களில் கனரக மின் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2017-18-இல் ரூ. 41,677 கோடியாக இருந்த ஏற்றுமதி 2020-21-இல் ரூ. 63,839 கோடியாக அதிகரித்துள்ளது.



  • 14:50 (IST) 29 Mar 2022
    கூடுதலாக ரூ.100 கோடி நிதி.. தமிழச்சி தங்கபாண்டியன்!

    தமிழக கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்திற்காக கூடுதலாக ரூ.100 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 14:30 (IST) 29 Mar 2022
    இந்தியா - இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ள நிலையில், இந்தியா - இலங்கை இடையே யாழ்ப்பாணத்தையொட்டி உள்ள 3 தீவுகளில் மின்சாரம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது.



  • 13:55 (IST) 29 Mar 2022
    அனைத்து தனியார் பள்ளுகளுக்கு சுற்றறிக்கை!

    அனைத்து பள்ளி பேருந்துகளும் முறையாக பராமரிப்பதுடன், புதுப்பிக்கப்படாத பேருந்துகளை இயக்கக் கூடாது. முறையான பயிற்சி பெற்ற, உரிமம் வைத்துள்ள நபர்களை ஓட்டுநர்களாக நியமிக்க வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.



  • 13:55 (IST) 29 Mar 2022
    ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு..

    ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ தேப் சர்மா, கொல்கத்தாவில் கைதாகி ஜாமினில் வெளிவந்த நிலையில், மயிலாப்பூர் போலீசார் விசாரணைக்கு நாளை மறுநாள் நேரில் ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.



  • 13:24 (IST) 29 Mar 2022
    இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:07 (IST) 29 Mar 2022
    யுஜிசி எச்சரிக்கை!

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம். 2014 -15ஆம் ஆண்டு வரை மட்டுமே அண்ணாமலை பல்கலை,.க்கு தொலைநிலை படிப்புக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு குறிப்பிட்ட பல்கலைக்கழகமே முழு பொறுப்பு என யுஜிசி அறிவித்துள்ளது.



  • 12:47 (IST) 29 Mar 2022
    இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி

    இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விஷமுறிவு மருந்துக்கான பாம்புகளை பிடிக்க இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினருக்கு அனுமதி என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 12:44 (IST) 29 Mar 2022
    ஐஐடியில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு

    ஐ.ஐ.டி.யில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பதிவான வழக்கில் 2 ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட 3 பேரிடம் மயிலாப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • 12:39 (IST) 29 Mar 2022
    அமேசான் நிறுவனத்திற்கான அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

    சென்னை பெருங்குடியில் அமேசான் நிறுவனத்திற்கான அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின். அமேசான் நிறுவனத்தின் 4வது அலுவலகம் 8.3 லட்சம் சதுர பரப்பில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 12:21 (IST) 29 Mar 2022
    'ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்த வேண்டும்

    டிசம்பர் 2021 - ஜனவரி 2022 காலத்தில் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடத்த வேண்டும் என்றும், மார்ச் 28 முதல் ஏப்ரல் 27 வரை ஒருமாதம் 'ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்தப்பட வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு.



  • 12:19 (IST) 29 Mar 2022
    போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த வேண்டும் - திருச்சி சிவா கோரிக்கை

    போக்சோ சட்டம் குறித்து பெரும்பாலான குழந்தைகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்தும் வகையில் வழிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை வைத்துள்ளார்.



  • 12:15 (IST) 29 Mar 2022
    உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - எம்.பி. வில்சன்

    உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் இல்லையென்றால் 2011ம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள்ளார்.



  • 11:31 (IST) 29 Mar 2022
    மதுரையில் இருந்து சர்வதேச விமான சேவை மீண்டும் துவக்கம்

    மதுரை சிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் துவங்கியது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சர்வதேச விமானங்கள் இயக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.



  • 11:22 (IST) 29 Mar 2022
    புதுப்பேட்டையில் ஓட்டலுக்குள் புகுந்த ட்ராக்டர் - ஒருவர் உயிரிழப்பு

    சேலம் மாவட்டம் புதுப்பேட்டையில் 16 வயது சிறுவன் இயக்கிய டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்து விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழப்பு. மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 11:11 (IST) 29 Mar 2022
    சென்னை குறளகத்தில் 2வது நாளாக போராட்டம்

    சென்னை குறளகத்தில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் 2வது நாளாக வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்



  • 10:53 (IST) 29 Mar 2022
    20ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை

    கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, நேற்று 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:40 (IST) 29 Mar 2022
    மரியுபோலில் 5,000 பேர் பலி?

    உக்ரைன் மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவத்தால் நடத்தப்பட்டுவரும் தாக்குதலில் 5,000 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



  • 10:31 (IST) 29 Mar 2022
    பெளத்த மதத்தை தழுவிய நடிகை

    பெளத்த மதத்தை பின்பற்றுவதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.



  • 10:16 (IST) 29 Mar 2022
    விருதுநகர் அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்து குழந்தை காயம்

    விருதுநகர் அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்து கீழே விழுந்ததில் அதில் இருந்த குழந்தை தலையில் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.



  • 10:12 (IST) 29 Mar 2022
    8 நாட்களில், 7ஆவது முறையாக பெட்ரோல் உயர்வு

    8 நாட்களில், 7ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



  • 09:58 (IST) 29 Mar 2022
    கஞ்சா விற்பனை செய்தால் குண்டர் சட்டம்-காவல் துறை டிஜிபி எச்சரிக்கை

    கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரித்தார்.



  • 09:57 (IST) 29 Mar 2022
    சென்னை மெட்ரோ ரயில்களில் நேற்று 2.1 லட்சம் பேர் பயணம்

    பேருந்துகள் சரிவர இயங்காததால் சென்னை மெட்ரோ ரயில்களில் நேற்று 2.1 லட்சம் பேர் பயணம் செய்தனர். பொது வேலைநிறுத்தத்தால் வழக்கத்தை விட இரு மடங்கு மெட்ரோவில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.



  • 09:47 (IST) 29 Mar 2022
    பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு

    தொடர்ந்து அதிகரித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.



  • 09:29 (IST) 29 Mar 2022
    மாணவன் உயிரிழந்த விவகாரம்: 2 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

    சென்னை, வளசரவாக்கத்தில் வேன் மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், வேன் ஓட்டுநர் பூங்காவனம், பணிப்பெண் ஞான சக்தி ஆகியோருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 09:27 (IST) 29 Mar 2022
    ஜம்மு-காஷ்மீரில் நில அதிர்வு

    ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.



  • 09:13 (IST) 29 Mar 2022
    தமிழ்நாடு முழுவதும் 89.52 சதவீத பேருந்துகள் இயக்கம்

    தமிழ்நாடு முழுவதும் 89.52 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், சென்னையில் 98.02 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.



  • 08:38 (IST) 29 Mar 2022
    பாலியல் வன்கொடுமை-கடலூரில் 3 இளைஞர்கள் கைது

    கடலூரில் காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிஷோர் (19), சதிஷ் (19), ஆரிப் (18) ஆகிய 3 இளைஞர்களை கைது செய்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.



  • 08:28 (IST) 29 Mar 2022
    பாலியல் வன்கொடுமை கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன்

    சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிங்ஷுக் தேவ் சர்மா ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றிருந்ததால் அவரை அங்குள்ள நீதிமன்றம் விடுவித்தது.



  • 08:28 (IST) 29 Mar 2022
    பாலியல் வன்கொடுமை கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன்

    சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிங்ஷுக் தேவ் சர்மா ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றிருந்ததால் அவரை அங்குள்ள நீதிமன்றம் விடுவித்தது.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment