Petrol Price update: 101-ஆவது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Tamilnadu News Update: தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி பெண்களுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எம்.பி. கனிமொழி உறுதியளித்தார்.
India News Update: உத்தரப் பிரதேசத்தில் நாளை 2-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. 55 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கு தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
Corona update: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41.05 கோடியை தாண்டியது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்:
அமெரிக்கா – 7,92,93,924
இந்தியா – 4,26,14,910
பிரேசில் – 2,74,25,743
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்வதற்கான வரைவு அறிக்கையை பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான SEBIயிடம் தாக்கல் செய்தது. முதலீடு பொதுச்சொத்து மேலாண்மைத்துறை செயலாளர் துகின் கந்த பாண்டே தகவல் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு மற்றும் 12ம் வகுப்பு கணித திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்துள்ளது. வினாத்தாள்கள் கசிந்தது குறித்து விசாரணை நடத்த தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
நாளை நடைபெறும் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்பட்டு முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், வினாத்தாள்கள் கசிந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் கடந்த 9ம் தேதியிலிருந்து திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. வினாத்தாள்கள் மாவட்ட தலைநகரங்களில் அச்சடித்து பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
அன்புக்குரிய சகோதரி மமதா பானர்ஜி என்னைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், ஆளுநர்களின் அரசியலமைப்பை மீறிய நடவடிக்கைகளைப் பற்றியும்; அவர்கள் அதிகாரத்தை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் போக்கைப் பற்றியும் தனது கவலையையும் ஆதங்கத்தையும் பகிர்ந்துகொண்டார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் ஒன்றுகூடிச் சந்திக்கலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார். மாநில சுயாட்சியை உயர்த்திப் பிடிப்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள்ள உறுதிப்பாட்டினை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன். எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் சந்திப்புக் கூட்டம் விரைவில் டெல்லிக்கு வெளியே நடைபெறும்.
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் மே மாதம் நடைபெறும் என தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 5ஜி அலைக்கற்றை ஏலம் 2022-23 நிதியாண்டில் நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார்.
கொரோனா காலத்தில் மக்களுக்கு ரூ.4,000 கொடுத்தது திமுக அரசு. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது யார்? என்று கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது 2 வாரங்களில் இது 3வது நிகழ்வாகும் என முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும் தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தென்கடலோர மாவட்டங்கள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது
மேற்கு வங்க சட்டசபையை முடக்கிய அ்மமாநில ஆளுநருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்கு வங்க ஆளுநரின் செயல் விதிமுறைகளுக்கு எதிரானது ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர மரியாதைகொடுப்பதில்தான் ஜனநாயகம் உள்ளது என்று கூறியுள்ளார்.
மறைந்த கன்னட திரைப்பட நடிகர் திரு. ராஜ்குமார் அவர்களின் மகனும் கன்னட திரைப்பட நடிகருமான திரு. சிவராஜ்குமார், அவரது மனைவி திருமதி கீதா சிவராஜ்குமார் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்தபோது, நடிகர் திரு.புனித் ராஜ்குமார் அவர்களின் மறைவிற்கு ஆறுதல் கூறினார். pic.twitter.com/NZaeD2h94r
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 13, 2022
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்தார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மேற்குவங்கத்தை போல் தமிழகத்திலும் சட்டமன்றம முடக்க நேரிடும் என்று கூறியதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், இபிஎஸ்சின் பகல்கனவு பலிகாது, அதிமுகவின் ஆசையை தனது பேச்சின் மூலம் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளார். முடக்கினால் தான் அடுத்த தேர்தலில் கூட்டணி என்று பாஜகவுக்கு அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மேற்குவங்கத்தை போல் தமிழகத்திலும் சட்டமன்றம முடக்க நேரிடும் என்று கூறியுள்ளார். .
ஹிஜாப் பிரச்சினை காரணமாக உடுப்பி மாவட்டத்தில் நாளை முதல் பிப்ரவரி 19 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணி முதல் 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடிதங்கள் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதாக மத்திய, மாநில அரசுகள் நினைப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு என முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டன் தெரிவித்துள்ளார்.
நதிநீர் இணைப்பு திட்டம் மூலம் தமிழகத்தில் விவசாயம் பெருகும்; நதிநீர் இணைப்பு திட்டம் வரலாற்று சிறப்புமிக்க திட்டம். நாடு முழுவதும் 200 கல்வி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன; கல்வி தொலைக்காட்சிகளில் சிறந்த கல்வியாளர்கள் மூலம் பாடம் நடத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையை முடக்க நினைக்கும் ஈபிஎஸ்-இன் பகல் கனவு நிச்சயம் பலிக்காது. அதிமுகவின் ஆசையை மத்திய அரசுக்கு தனது பேச்சு மூலம் தெரியப்படுத்தியுள்ளார். முடக்கினால் தான் அடுத்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சியைப் பிடித்தது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
ஆப்கானிஸ்தானில் லேசான நில அதிர்வு நேற்று இரவு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆகப் பதிவானது.
இந்தியாவில் மேலும் 44,877 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்றும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,26,31,421 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
போடி நகராட்சி 5ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் செல்வி, முருங்கைக்கீரை மற்றும் மாஸ்க் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேற்கு வங்கத்தை போல தமிழகத்திலும் சட்டமன்றம் முடக்க நேரிடும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 5,54,187 பூத் ஸ்லிப் வினியோகம் செய்யப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சேலம் ஓமலூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார்.
புவி கண்காணிப்புக்காக வடிவமைத்துள்ள இஓஎஸ்-04 என்ற அதிநவீன ரேடார் செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 5 மணி 59 நிமிடத்திற்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் காணொலி வாயிலாக பிரசாரம் செய்யவுள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு டகோட்டா நகரில் உள்ள சியோக்ஸ் நீர்வீழ்ச்சி, பனியில் முழுமையாக உறைந்தது!
எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை தொடக்கவுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம் 2வது நாளாக இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது. முக்கிய வீரர்களான ரெய்னா, ஸ்டீவன் ஸ்மித், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் இன்று ஏலத்தில் எடுக்கப்படுவார்களா என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லையில் உவரி அந்தோணியார் ஆலய திருத்தலப் பெருவிழாவில் தமிழக, கேரள பக்தர்கள் குவிந்தனர்.