/tamil-ie/media/media_files/uploads/2019/09/che.jpg)
Tamil Nadu news today in tamil,
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் யாரும் தப்பிக்காத வண்ணம் அவர்களிடமிருந்து அபராதத்தை பெறும் பொருட்டு சென்னை போலீஸ் பெரும்படையுடன் களமிறங்கி உள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் இ-சலான் மிஷின் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 200 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசாருக்கு 350 இ-சலான் மிஷின்கள் வழங்கப்பட்டு அவர்கள் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், போக்குவரத்து போலீசார் மட்டுமல்லாது, சட்டம் - ஒழுங்கு சிறப்பு எஸ்.ஐ.களுக்கும், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த நடைமுறை கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசாருக்கு 35 இ-சலான் மிஷின்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கு சிறப்பு எஸ்.ஐகளுக்கென கூடுதலாக 350 இ-சலான் மெஷின்கள் வழங்கப்பட உள்ளதாக சென்னை போலீஸ் கூடுதல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us