Advertisment

இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு ஏற்பாடுகள்

தமிழகத்தில் 31,150 பதற்றமான வாக்குச்சாவடிகளை தமிழ்நாடு காவல்துறை அடையாளம் கண்டுள்ளது

author-image
WebDesk
New Update
local body election election 2022

local body election election 2022: 31150 critical polling stations identified

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் வியாழன் அன்று முடிவடைந்து, பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Advertisment

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் உள்ள 12,607 பதவிகளுக்கு மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பிப்ரவரி 19-ம் தேதி அமைதியான முறையில் வாக்களிப்பதை உறுதி செய்வதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும்.

இது பலமுனைப் போட்டியாகத் தோன்றினாலும், மாநிலம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.

இதற்கிடையே’ தமிழகத்தில் 31,150 பதற்றமான வாக்குச்சாவடிகளை தமிழ்நாடு காவல்துறை அடையாளம் கண்டுள்ளது மற்றும் நாளை நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இந்தச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 455 இடங்களில் போலீசார் தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைத்துள்ள நிலையில், அவர்கள் சட்டவிரோத ஆயுதங்கள், மதுபானங்கள் மற்றும் சிக்கலை உருவாக்கும் நோக்கத்துடன் வரும் வெளியாட்களின் தேவையற்ற நடமாட்டங்களைத் தடுக்க சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காவல்துறை பாதிக்கப்படக் கூடிய 1,343  இடங்களை அடையாளம் கண்டு, குறைந்தபட்சம் 846 விரைவு தடுப்பு குழுக்களை நிலைநிறுத்தியுள்ளது, இதனால் அவர்கள் அவசரகாலத்தில் பாதிக்கப்படக்கூடிய வாக்குச் சாவடிகளை விரைவாகச் சென்றடைவார்கள்.

தேர்தல் பணிக்காக மொத்தம் 97,882 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கொரோனா வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே’ தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கும் விதிமீறல் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment