Advertisment

TN Urban Local Body Elections : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவு!

Tamil Urban Local Body Polls News Today LIVE, 19 February 2022, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
TN Urban Local Body Elections : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவு!

Election Updates: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கியது.

Advertisment

பொதுமக்கள் ஆர்வமுடன் முன்வந்து வாக்களித்து வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் 31,150 வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

12,607 பதவியிடங்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில் சுமார் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று அமைதியான முறையில் வாக்களிப்பதை உறுதி செய்வதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, மற்றும் பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. இது பலமுனைப் போட்டியாகத் தோன்றினாலும், மாநிலம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் 31,150 பதற்றமான வாக்குச்சாவடிகளை தமிழ்நாடு காவல்துறை அடையாளம் கண்டுள்ளது மற்றும் இன்று நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இந்தச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 455 இடங்களில் போலீசார் தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைத்துள்ள நிலையில், அவர்கள் சட்டவிரோத ஆயுதங்கள், மதுபானங்கள் மற்றும் சிக்கலை உருவாக்கும் நோக்கத்துடன் வரும் வெளியாட்களின் தேவையற்ற நடமாட்டங்களைத் தடுக்க சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காவல்துறை பாதிக்கப்படக் கூடிய 1,343  இடங்களை அடையாளம் கண்டு, குறைந்தபட்சம் 846 விரைவு தடுப்பு குழுக்களை நிலைநிறுத்தியுள்ளது. இதனால் அவர்கள் அவசர காலத்தில் பாதிக்கப்படக்கூடிய வாக்குச் சாவடிகளை விரைவாகச் சென்றடைவார்கள்.

தேர்தல் பணிக்காக மொத்தம் 97,882 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கொரோனா வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கும் விதிமீறல் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



  • 22:47 (IST) 19 Feb 2022
    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது - டிஜிபி சைலேந்திர பாபு

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது. சமூக வலைதளங்கள், தொலைபேசி மூலம் பொதுமக்கள் அளித்த தகவல்களுக்கு காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை மேறகொண்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்



  • 22:47 (IST) 19 Feb 2022
    திமுக மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக புகார்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை மறைப்பதற்காக திமுக பல்வேறு வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டை போன்று சென்னை மாநகராட்சியை புறவாசல் மூலமாக கைப்பற்ற திமுக முயற்சி செய்யும் திமுக மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் அதிமுக புகார் மனு அளித்தள்ளது.



  • 21:15 (IST) 19 Feb 2022
    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது - டிஜிபி சைலேந்திர பாபு

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது. சமூக வலைதளங்கள், தொலைபேசி மூலம் பொதுமக்கள் அளித்த தகவல்களுக்கு காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை மேறகொண்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்



  • 19:54 (IST) 19 Feb 2022
    பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்சினை செய்த பாஜக பூத் ஏஜெண்ட் மீது வழக்கு பதிவு

    மதுரை மேலூர் 8வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது



  • 19:53 (IST) 19 Feb 2022
    பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்சினை செய்த பாஜக பூத் ஏஜெண்ட் மீது வழக்கு பதிவு

    மதுரை மேலூர் 8வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது



  • 19:03 (IST) 19 Feb 2022
    மதுரை திருமங்கலம் 17-வது வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை

    மதுரை திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டில், அதிகளவில் கள்ள ஓட்டு பதிவாகியுள்ளதாக திமுக வேட்பாளர் புகார் அளித்ததை தொடர்ந்து, இந்த வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் அலுவலர் தேர்தல் ஆணைத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.



  • 18:59 (IST) 19 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது இதில் சென்னை மாநகராட்சி தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 41.68% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல், ஆவடி மாநகராட்சியில் 5 மணி நிலவரப்படி, 45.98% வாக்குகளும், தாம்பரம் மாநகராட்சியில், 5 மணி நிலவரப்படி 43% வாக்குகளும் பதிவாகியுள்ளது.



  • 18:15 (IST) 19 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடக்கம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கொரோனா பாதித்தோருக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் வாக்களித்தனர். தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது



  • 18:07 (IST) 19 Feb 2022
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாலை மறியல்

    திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாகக் கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வண்ணாரப்பேட்டையில் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்



  • 17:26 (IST) 19 Feb 2022
    மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது வாக்கை பதிவு செய்தார்

    சென்னை அண்ணா நகர் வாக்குச்சாவடியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது வாக்கை பதிவு செய்தார்



  • 17:07 (IST) 19 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.18% வாக்குப்பதிவு

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.18% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மாநகராட்சிகளில் - 39.13%, நகராட்சிகளில் - 53.49%, பேரூராட்சிகளில் - 61.38% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது



  • 17:04 (IST) 19 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு - மாநில தேர்தல் ஆணையம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. 5 மணிக்கு முன் வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படும். கொரோனா தொற்று பாதித்தவர்கள் 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது



  • 16:55 (IST) 19 Feb 2022
    வேலூர் மாநகராட்சி 18வது வார்டு, வாக்குச்சாவடி எண் 90ல் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தடை

    வேலூர் மாநகராட்சி 18வது வார்டில் உள்ள, வாக்குச்சாவடி எண் 90-ல் வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதாகியதால், 2 மணி நேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவு தடைபட்டுள்ளது



  • 16:54 (IST) 19 Feb 2022
    எல்.முருகன் வாக்கை யாரும் செலுத்தவில்லை; அவர் வாக்களிக்கலாம் – மாநில தேர்தல் ஆணையம்

    மத்திய அமைச்சர் எல்.முருகன் வாக்கை யாரும் செலுத்தவில்லை. அவர் வாக்களிக்கலாம். சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் முருகன் என்ற பெயர் இரண்டு முறை உள்ளது. அதில் ஒன்றுக்கு வாக்கு செலுத்தப்பட்டுள்ளது. என மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.



  • 16:37 (IST) 19 Feb 2022
    வேலூர் மாநகராட்சி 18வது வார்டு, வாக்குச்சாவடி எண் 90ல் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தடை

    வேலூர் மாநகராட்சி 18வது வார்டில் உள்ள, வாக்குச்சாவடி எண் 90-ல் வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதாகியதால், 2 மணி நேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவு தடைபட்டுள்ளது



  • 16:24 (IST) 19 Feb 2022
    சென்னை மாநகராட்சியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகள் பதிவு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகள் பதிவாகியுள்ளன



  • 16:09 (IST) 19 Feb 2022
    புதுக்கோட்டை நகராட்சி 18-வது வார்டு வாக்குச்சாவடியில் திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம்

    புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடியில் திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிக அளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, இரு கட்சிகளை சேர்ந்தவர்களையும் வெளியேற்றி வருகின்றனர்



  • 15:57 (IST) 19 Feb 2022
    கியூ.ஆர். கோடு டோக்கன் - அதிமுக வட்ட செயலாளரிடம் காவல்துறை விசாரணை

    சென்னை மயிலாப்பூர் தெற்கு கோயில் அருகே QR குறியீடு கொண்ட இரட்டை இலை, ஜெயலலிதா புகைப்படம் அச்சடிக்கப்பட்ட கார்டுகளை கொடுத்துக்கொண்டிருந்த அதிமுக வட்டச்செயலாளர் தங்கதுரையை, தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்



  • 15:41 (IST) 19 Feb 2022
    எல் முருகனின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுள்ளனர் - அண்ணாமலை புகார்

    சென்னை அண்ணாநகர் வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் ஓட்டை வேறு ஒருவர் செலுத்தியதாகவும், மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுக்குமா என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 15:30 (IST) 19 Feb 2022
    ஜெய்சங்கருடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் இங் எங் ஹென் சந்தித்து பேசினார். இருதரப்பு , ஆசியான் தொடர்பான பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 15:19 (IST) 19 Feb 2022
    நடிகர் சூர்யா, கார்த்தி வாக்களிப்பு

    சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபா வாக்குச்சாவடியில் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர்.



  • 14:33 (IST) 19 Feb 2022
    சென்னையில் பகல் 1 மணி நிலவரப்படி 23.42% வாக்குகள் பதிவு

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் 35.34 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், குறைந்தபட்சமாக சென்னையில் தான் 23.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூரில் 36.07%, கரூரில் 50.4%, காஞ்சிபுரத்தில் 41.30%, நெல்லையில் 37.7% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • 14:33 (IST) 19 Feb 2022
    சென்னையில் பகல் 1 மணி நிலவரப்படி 23.42% வாக்குகள் பதிவு

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் 35.34 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், குறைந்தபட்சமாக சென்னையில் தான் 23.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.



  • 14:25 (IST) 19 Feb 2022
    சென்னையில் பகல் 1 மணி நிலவரப்படி 23.42% வாக்குகள் பதிவு

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி, சென்னை மாநகராட்சியில் 23.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், வேலூரில் 36.07%, கரூரில் 50.4%, காஞ்சிபுரத்தில் 41.30%, நெல்லையில் 37.7% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



  • 14:23 (IST) 19 Feb 2022
    சென்னையில் பகல் 1 மணி நிலவரப்படி 23.42% வாக்குகள் பதிவு

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் 35.34 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், குறைந்தபட்சமாக சென்னையில் தான் 23.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூரில் 36.07%, கரூரில் 50.4%, காஞ்சிபுரத்தில் 41.30%, நெல்லையில் 37.7% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • 14:11 (IST) 19 Feb 2022
    வாக்களிக்க அமெரிக்காவிலிருந்து வந்த இளைஞர்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அமெரிக்காவிலிருந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் இம்தியாஸ் ஷெரீப் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.



  • 14:09 (IST) 19 Feb 2022
    காட்டூர் பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

    திருச்சி திருவெறும்பூர் அருகே 38வது வார்டில் காட்டூர் பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை, பூத் ஸ்லீப்பை பெட்டியில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:00 (IST) 19 Feb 2022
    ஜனநாயக கடமையாற்றிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

    சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் தனது வாக்கினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனது வாக்கினை செலுத்தினார்.



  • 13:58 (IST) 19 Feb 2022
    பேருந்தை பயணிகளுடன் நிறுத்திவிட்டு ஜனநாயக கடமையாற்றிய ஓட்டுநர்

    தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் பயணிகளுடன் வந்த பேருந்தை 10 நிமிடம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.



  • 13:58 (IST) 19 Feb 2022
    பேருந்தை பயணிகளுடன் நிறுத்தி வைத்துவிட்டு ஜனநாயக கடமையாற்றிய ஓட்டுநர்

    தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் பயணிகளுடன் வந்த பேருந்தை 10 நிமிடம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.



  • 13:58 (IST) 19 Feb 2022
    பேருந்தை பயணிகளுடன் நிறுத்தி வைத்த ஜனநாயக கடமையாற்றிய ஓட்டுநர்

    தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் பயணிகளுடன் வந்த பேருந்தை 10 நிமிடம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.



  • 13:53 (IST) 19 Feb 2022
    பேருந்தை பயணிகளுடன் நிறுத்திவிட்டு ஜனநாயக கடமையாற்றிய ஓட்டுநர்

    தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் பயணிகளுடன் வந்த பேருந்தை 10 நிமிடம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.



  • 13:41 (IST) 19 Feb 2022
    ஹிஜாப்பை அகற்ற சொன்ன பாஜக முகவரிடம் விசாரணை

    மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கோரி, தகராறு செய்த பாஜக முகவர் கிரிராஜனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • 13:40 (IST) 19 Feb 2022
    ஆம்புலன்ஸ் முலம் வாக்குச்சாவடிக்கு வந்த பெண் வாக்காளர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் முலம் வாக்கு சாவடிக்கு வந்த கோவிந்தம்மாள் என்ற பெண்மணி, தன்னுடைய ஜனநாயக கடமையாற்றினார்



  • 13:30 (IST) 19 Feb 2022
    விதிகள் மீறி வாக்கு சேகரிப்பு.. அதிமுக, பாஜக, பாமக-வினர் விரட்டியடிப்பு!

    விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், விதிகளை மீறி 200 மீ.க்குள் வந்து வாக்கு சேகரித்த அதிமுக, பாஜக மற்றும் பாமகவினரை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு நிலவியது.



  • 13:30 (IST) 19 Feb 2022
    நெல்லையில் மாற்றி வாக்குப்பதிவு!

    நெல்லை 26வது வார்டில் நாகராஜன் என்பவரது வாக்கினை வேறொருவர் செலுத்தியதால், தேர்தல் விதிப்படி படிவம் 22ஐ பூர்த்தி செய்து சேலஞ்ச் வாக்கை நாகராஜன் பதிவு செய்தார்.



  • 13:19 (IST) 19 Feb 2022
    டி.ஆர்.பாலு வாக்குப்பதிவு!

    திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சென்னை கோடம்பாக்கத்தில் வாக்களித்தார்.



  • 13:18 (IST) 19 Feb 2022
    அரியலூர்: 30.79% வாக்குகள் பதிவு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரியலூர் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.79% வாக்குகள் பதிவு!



  • 13:18 (IST) 19 Feb 2022
    ஹிஜாப்பை அகற்ற சொன்ன பாஜக முகவரிடம் விசாரணை!

    மதுரை மேலூர் நகராட்சி 8வது வார்டில்’ வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை’ பாஜக முகவர் அகற்ற கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • 12:52 (IST) 19 Feb 2022
    தேர்தல் 2022: காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குப்பதிவு!

    தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குப்பதிவு. சென்னையில் 17.88% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்!



  • 12:51 (IST) 19 Feb 2022
    திமுக அமோக வெற்றி பெறும்.. உதயநிதி!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கூறினார்.



  • 12:34 (IST) 19 Feb 2022
    கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ், டி.ராஜேந்தர் வாக்களித்தனர்!

    திண்டிவனம் வாக்குச்சாவடியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்,சென்னை தி.நகர் வாக்குச்சாவடியில் நடிகர் டி.ராஜேந்தர் தங்கள் வாக்கை செலுத்தினர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது வாக்கை செலுத்தினார்.



  • 12:18 (IST) 19 Feb 2022
    வாக்களித்த பிறகு சசிகலா கண்ணீர்!

    டி.நகர் வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு செலுத்திய வி.கே. சசிகலா’ என் அக்காவுடன் சேர்ந்துதான் வாக்களித்திருக்கிறேன். இந்த முறைதான் நான் தனியாக வந்து வாக்களித்திருக்கிறேன் என கண்ணீர்மல்க கூறினார்.



  • 12:18 (IST) 19 Feb 2022
    சரத்குமார் வாக்கு செலுத்தினார்!

    சென்னை கொட்டிவாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாக்களித்தார்.



  • 12:18 (IST) 19 Feb 2022
    வாக்காளர்களுக்கு செல்போன் விநியோகம்.. 4 பேர் கைது!

    கரூர் மாநகராட்சியின் 38வது வார்டில் வாக்காளர்களுக்கு செல்போன் விநியோகம் செய்த புகாரில் அதிமுக பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.



  • 12:05 (IST) 19 Feb 2022
    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வாக்குப்பதிவு!

    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், தன் மனைவியுடன் கானத்தூர், குடுமியாண்டிதோப்பு பகுதியிலுள்ள புனித தோமையர்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார்.



  • 12:03 (IST) 19 Feb 2022
    கனிமொழி வாக்குப்பதிவு!

    சென்னை, மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் கனிமொழி எம்.பி. வாக்களித்தார்.



  • 12:01 (IST) 19 Feb 2022
    ஓபிஎஸ், சசிகலா, கே. பாலகிருஷ்ணன் வாக்களித்தனர்!

    தேனி பெரியகுளம் வாக்குச்சாவடியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். அதேபோல் டி.நகர் வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வி.கே. சசிகலா வாக்களித்தார். மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிதம்பரம் நகராட்சியில் வாக்குப்பதிவு செய்தார்.



  • 12:01 (IST) 19 Feb 2022
    அன்புள்ள சென்னை மக்களே! வெளியே வந்து வாக்களியுங்கள்!

    சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாக உள்ளது. சென்னையில் 3.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. மிகவும் குறைந்த அளவாக தாம்பரம் மாநகராட்சியில் 3.30 சதவீத வாக்குப் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். இந்நிலையில்’ சென்னை மக்களை வாக்களிக்க வருமாறு சென்னை மாநகாராட்சி ட்வீட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளது.



  • 11:50 (IST) 19 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

    தற்போதுவரை பேரூராட்சிகளில் 11.74% வாக்குகள் பதிவாகியுள்ளன. நகராட்சிகளில் 10.32% வாக்குகள், மாநகராட்சி தேர்தலில் 5.78% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.



  • 11:39 (IST) 19 Feb 2022
    மதுரை ஹிஜாப் விவகாரம்.. நடவடிக்கை எடுக்கப்படும்.. தேர்தல் ஆணையர்!

    மதுரை மேலூர் நகராட்சி 8வது வார்டில்’ வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை’ பாஜக முகவர் அகற்ற கூறிய புகாரில்’ ஆட்சியர் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு!



  • 11:20 (IST) 19 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

    தற்போதுவரை பேரூராட்சிகளில் 11.74% வாக்குகள் பதிவாகியுள்ளன. நகராட்சிகளில் 10.32% வாக்குகள், மாநகராட்சி தேர்தலில் 5.78% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.



  • 11:19 (IST) 19 Feb 2022
    பிரபலங்கள் வாக்குப்பதிவு!

    சென்னை கோடம்பாக்கம் வாக்குச்சாவடியில் கவிஞர் வைரமுத்து தனது வாக்கினை செலுத்தினார். அதேபோல், சென்னை ஈக்காட்டுதாங்கல் வாக்குச்சாவடியில் நடிகர் அருண்விஜய் வாக்களித்தார்.



  • 11:18 (IST) 19 Feb 2022
    அரசியல் தலைவர்கள் வாக்குப்பதிவு!

    சென்னையில் டிடிவி தினகரன், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியோர் வாக்களித்தனர். மதுரையில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வாக்களித்தார்.



  • 11:09 (IST) 19 Feb 2022
    மனைவியுடன் சேர்ந்து வாக்கு செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சேர்ந்து வாக்களித்தார்.



  • 10:51 (IST) 19 Feb 2022
    கோவையில் திமுக-பாஜகவினர் இடையே வாக்குவாதம்

    கோவையில் காரில் பாஜக கொடியுடன் எம்எல்ஏ வானதி சீனிவாசன் வந்ததாக திமுகவினர் புகார். பாஜக, திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



  • 10:47 (IST) 19 Feb 2022
    ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் மாநில நிதி அமைச்சர்

    மதுரையில் உள்ள வாக்குச்சாவடியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாக்களித்தார்.



  • 10:39 (IST) 19 Feb 2022
    வாக்குப் பதிவு இயந்திர கோளாறு: காத்திருந்த எம்.பி.

    திமுக எம்.பி. திருச்சி சிவா வாக்களிக்க வந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்டது. சிறிது நேரம் காத்திருந்த திருச்சி சிவா வாக்குப்பதிவு இயந்திரம் சரிசெய்யப்பட்ட பின் வாக்களித்தார்.



  • 10:38 (IST) 19 Feb 2022
    வாக்களித்தார் ராமதாஸ்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டிவனம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.



  • 10:04 (IST) 19 Feb 2022
    வாக்களித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

    திருச்சியில் தனது தாயாருடன் வந்து வாக்கைப் பதிவு செய்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.



  • 09:38 (IST) 19 Feb 2022
    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்குப் பதிவு

    கோவை, சுகுணாபுரத்தில் வாக்களித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.



  • 09:35 (IST) 19 Feb 2022
    முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி வாக்குப் பதிவு

    கிருஷ்ணகிரியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்றபடி வாக்களித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி.



  • 09:27 (IST) 19 Feb 2022
    பணம் கொடுக்க முயற்சித்த அதிமுகவினர்?

    சென்னை திருவான்மியூரில் 179 ஆவது வார்டுக்கு உட்பட்ட சிங்காரவேலன் நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுகவினர் முயன்றதாகவும் போலீஸார் வந்ததும் தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யார் பணம் கொடுக்க வந்தது என்று போலீஸார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர்.



  • 09:25 (IST) 19 Feb 2022
    வாக்கு செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

    அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் தனது வாக்கினை செலுத்தினார்.



  • 09:10 (IST) 19 Feb 2022
    சிதம்பரத்தில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது

    சிதம்பரத்தில் பெண்களுக்கான வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது.



  • 09:06 (IST) 19 Feb 2022
    சேலத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

    சேலத்தில் காலை முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. வயதானவர்கள் முதல் இளம் வயது வாக்காளர்கள் வரை ஆர்வத்துடன் முன்வந்து வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்.



  • 08:54 (IST) 19 Feb 2022
    கொட்டும் மழையிலும் ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் குடை பிடித்தபடி ஆர்வமுடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.



  • 08:50 (IST) 19 Feb 2022
    வாக்களித்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

    முன்னாள் தமிழக பாஜக தலைவரும் தற்போதைய தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வாக்கு செலுத்தினார்.



  • 08:48 (IST) 19 Feb 2022
    சென்னை ஆணையர் வாக்குப் பதிவு

    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி வாக்களித்தார்.



  • 08:46 (IST) 19 Feb 2022
    கடலூரில் வாக்குப் பதிவு தாமதம்

    கடலூர் மாநகராட்சி 5ஆவது வார்டில் மின்னணு வாக்கு இயந்திரம் பழுதானதால் அரைமணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது.



  • 08:46 (IST) 19 Feb 2022
    கடலூரில் வாக்குப் பதிவு தாமதம்

    கடலூர் மாநகராட்சி 5ஆவது வார்டில் மின்னணு வாக்கு இயந்திரம் பழுதானதால் அரைமணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது.



  • 08:41 (IST) 19 Feb 2022
    24×7 வாகனச் சோதனைகள்

    845 விரைவு அதிரடி படைகள், 1,343 போலீஸ் குழுக்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் 846 விரைவு அதிரடி படைகளும், 1,343 போலீஸ் குழுக்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

    455 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சட்டவிரோத ஆயுதங்கள், மதுபானம் கடத்துவதைத் தடுக்கவும், குறிப்பிட்ட அதிகார வரம்பிற்குட்பட்ட வெளியாட்களின் நடமாட்டத்தை சரிபார்க்கவும் 24×7 வாகனச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



  • 08:40 (IST) 19 Feb 2022
    24×7 வாகனச் சோதனைகள்

    845 விரைவு அதிரடி படைகள், 1,343 போலீஸ் குழுக்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் 846 விரைவு அதிரடி படைகளும், 1,343 போலீஸ் குழுக்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

    455 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சட்டவிரோத ஆயுதங்கள், மதுபானம் கடத்துவதைத் தடுக்கவும், குறிப்பிட்ட அதிகார வரம்பிற்குட்பட்ட வெளியாட்களின் நடமாட்டத்தை சரிபார்க்கவும் 24×7 வாகனச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



  • 08:38 (IST) 19 Feb 2022
    ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய நடிகர் விஜய்

    நீலாங்கரையில் உள்ள வாக்கு சாவடியில் நடிகை விஜய் தனது வாக்கை பதிவு செய்தார்.



  • 08:33 (IST) 19 Feb 2022
    பாதுகாப்புப் பணியில் 1.13 லட்சம் பேர்!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.13 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினர், முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் காவல் துறையினர், சிறப்புப் படை போலீசார், அதிவிரைவு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



  • 08:33 (IST) 19 Feb 2022
    பாதுகாப்புப் பணியில் 1.13 லட்சம் பேர்!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.13 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினர், முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் காவல் துறையினர், சிறப்புப் படை போலீசார், அதிவிரைவு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



  • 08:31 (IST) 19 Feb 2022
    வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த இறைச்சி பறிமுதல்

    தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.



  • 08:29 (IST) 19 Feb 2022
    வாக்குச் சாவடியை இப்படி தெரிஞ்சிக்கோங்க..

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. நகரில் 61 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

    பொதுமக்கள் தங்கள் வாக்குச் சாவடியை இணையதளம் - http://election.chennaicorporation.gov.in/ மூலம் சரிபார்க்கலாம்.



  • 08:28 (IST) 19 Feb 2022
    ''சென்னையில் 1,061 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை''

    சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. நகரில் ஆண்களுக்கு 255, பெண்களுக்கு 255, பொது வார்டுகள் 5,284 என மொத்தம் 5,794 வாக்குச் சாவடிகள் உள்ளன. 1,061 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும், 182 முக்கியமான வாக்குச் சாவடிகள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.



  • 08:25 (IST) 19 Feb 2022
    வாக்குப் பதிவு தொடங்கியது

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 30,735 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.



Tamilnadu Tamilnadu Live News Udpate Tamilnadu News Update Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment