Advertisment

கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் புறநகர் ரயில் சேவை : தெற்கு ரயில்வே

Chennai Sub-urban Trains Services :

author-image
WebDesk
New Update
கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் புறநகர் ரயில் சேவை : தெற்கு ரயில்வே

Chennai Sub-urban Trains Services During Non Peak hours:  சென்னை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisment

 

 

 

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், சென்னை புறநகர் ரயில்களில் நாளைமுதல் ரயிலில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

காலை 7 மணிமுதல் 9.30 மணிவரை, மாலை 4.30 மணிமுதல் 7 மணிவரை போன்றவைகள் கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரங்கள் என்று பொருள் கொள்ளப்படுகிறது. எனவே, இந்த நேரங்களில் ரயில் சேவைகளில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரங்களில் முன்பை போல அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் காட்டாம் முகக்கவசம் அணிய வேண்டும். ரயில் நிலையங்களில் சமூக விலகல்களை கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை புறநகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், கடந்த அக்டோபர் 5ம் தேதியில் இருந்து அத்தியாவசிய பணியாளர்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவை துவங்கப்பட்டது. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன நிலையில் மக்களின் போக்குவரத்து மற்றும் வசதியை இது பெரிய அளவில் மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment