Advertisment

“லாக்கி ரேன்சம்வேர்” அச்சுறுத்தல்... இந்திய கணினி ஆய்வு மையம் எச்சரிக்கை! கணினிகளை பாதுகாப்பது எப்படி?

இந்தியாவில் லாக்கி என்னும் ரேன்சம்வேர் பரவிவருவதைத் தொடர்ந்து, இந்திய கணினி ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
ransomware attack, Indian, Computers, internet, Virus,

இந்தியாவில் லாக்கி என்னும் ரேன்சம்வேர் பரவிவருவதைத் தொடர்ந்து, இந்திய கணினி ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் பல்வேறு நிறுவனங்களை பாதித்த “வானாகிரை ரேன்சம்வேர்” போன்று லாக்கி எனும் புதிய ரேன்சம்வேர் இந்தியாவில் வேகமாக பரவி வருவதாக இந்திய கணினி ஆய்வு குழு (Indian Computer Emergency Response Team) தெரிவித்துள்ளது. புதிய வகை லாக்கி ரான்சம்வேர் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

முன்னதாக ‘வானாகிரை’ ரேன்சம்வேர் உலகின் பல்வேறு நிறுவனங்களையும் பாதிப்படையச் செய்தது. இதேபோல, தற்போது லாக்கி என்னும் ரேம்சம் வேர் இந்தியாவில் பரவி வருவதாகவும், எனவே எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய கணினி ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, ஈமெயில் பயன்படுத்தும்பாது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், சந்தேகத்திர்குரிய ஈமெயில்களை திறப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்டி-ஸ்பேம் வழிமுறைகள் மற்றும் ஸ்பேம் பிளாக் பட்டியலை மேம்படுத்துவதோடு, ஆன்டிவைரஸ் பயன்படுத்தி கணினிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பினை இந்திய கணினி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

லாக்கி ரேன்சம்வேர் என்பது என்ன?

ரேன்சம் வேர் என்பது இணதள தாக்குதல் என்று எடுத்துக் கொள்ளலாம். கம்யூட்டர்களில் உள்ள டேட்டாக்களை முடக்கும் இந்த ரேன்சம்வேர், டேட்டாக்களை மீண்டும் திறப்பதற்கு பிட்காயின் மூலம் பணம் கேட்கும். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான லாக்கி ரேன்சம்வேர், இப்போது புதிய வகையில் வெளிவருகிறது. ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியான புதிய வகையிலான லாக்கி ரேன்சம்வேர், இந்தியாவிலும் ஊடுருவியுள்ளதாம். இது தொடர்பாக சைபர் செக்யூரிட்டி கம்பெனியான ஆப்-ரிவர் தகவலின்படி, 23 மில்லியன் மெசெஜ்ஸ் லாக்கி ரேன்சம்வேர் தாக்குதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாம்.

இது எவ்வாறு செயல்படுகிறது?

மால்வேர்பைட்ஸ் ஆராய்சியின் படி, “.diablo6” என்ற எக்ஸ்டென்சன் மூலமாக இந்த ரேன்சம்வேர் பரப்பப்படுகிறது. தற்போது, புதிய வகையாக “.Lukitus” என்ற எக்ஸ்டென்ஸ் மூலமாக பரவுகிறது. அதில் குறிப்பிடும்படியாக, ஸ்பேம் மெயில்ஸ் மூலமாக ஸிப்( ZIP) அட்டாச்மென்ட் மூலமாக இந்த ரேன்சம்வேர் அனுப்பப்படுகிறது. அந்த ஸிப் ஃபைலானது விஷுவல் பேசிக் ஸ்கிரிப்டை கொண்டிருக்கிறது. இதுபோன்று வரும் மெயில்களில், அதில் சப்ஜெக்ட்டாக “please print”, “documents”, “photo”, “images”, “scans” and “pictures” போன்றவை இடம்பெற்றிருக்கும்.

அந்த மெயில்களை திறக்கும்போது, லாக்கி ரேன்சம்வேர் உங்களது கணினியில் தானாகவே டவுண்லோடு ஆகிவிடும். ஒருமுறை லாக்கி உங்களது கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகிவிட்டால், உங்களது கம்யூட்டரின் பேக்ரவுண்ட் இமேஜ் மாற்றப்பட்டுள்ளதை காணமுடியும். “Lukitus.htm” என்ற தலைப்பில் “htm” ஃபைலாக மாற்றப்பட்டிருப்பதோடு, பிட்காயின் மூலம் எவ்வாறு பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கும். மேலும், கணினியில் இருக்கும் அனைத்து ஃபைல்களும் என்க்ரிப்ட் செய்யப்பட்டு அவை “.lukitus” அல்லது “.diablo6” என்ற எக்ஸ்டென்ஷன்களில் மாற்றப்படும்.

ஹேக்கர்கள் .5 முதல் 1 பிட்காயின்கள் ரேன்சம் தொகையாக கேட்டுவருகின்றனர். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தடுக்க முடியுமா?

லாக்கி ரேன்சம்வேரால் பாதிக்கப்பட்ட கணினிகளை மீட்பதற்கு தற்யோதைய நிலையில், எந்த வழியையும் ஆராய்சியாளர்கள் கண்டறிந்திருக்கவில்லை. தற்போதைக்கு, லாக்கி ரேன்சம்வேரில் இருந்து முன்கூட்டியே பாதுகாத்துக் கொள்ளவே முடியும். அல்லது, ரேன்சம் செலுத்த வேண்டிய நிலை தான் ஏற்படும்.

ரேன்சம்வேரில் இருந்து கணினியை பாதுகாப்பது எப்படி?

  • உங்களது கம்யூட்டரில் உள்ள டேட்டாக்களை அடிக்கடி பேக்-அப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • கணினியில் ஆன்டி-வைரஸ் மென்பொருள் பயன்படுத்த வேண்டும்
  • சந்தேகத்திற்குரிய மெயில் மற்றும் இணையதளத்தை திறக்கக் கூடாது.

லாக்கி ரேன்சம்வேர் தாக்குதலில் இருந்து தப்பிக்க இதுபோன்ற சில அடிப்படையான வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமானதாகும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment