Advertisment

LokSabha Elections 2019 : வரிசையில் நின்று வாக்களித்த அரசியல் பிரபலங்கள்

LokSabha Elections 2019 : மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LokSabha Elections 2019

LokSabha Elections 2019

LokSabha Elections 2019 : பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கிய நிலையில், திரைப் பிரபலங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Advertisment

அரசியல் தலைவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்றும், எந்தவித பாதுகாப்பும் இன்றி தனி ஆளாக வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியது பலரின் பாராட்டுக்களை பெற்றதோடு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

 

மேலும் படிக்க.. 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்

வரிசையில் நின்று வாக்களித்த அரசியல் பிரபலங்கள் லிஸ்ட் இதோ..

1. முதல்வர் பழனிசாமி:

எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் தனி ஆளாக வந்து, மக்களோடு வரிசையில் நின்று தனது வக்கினை பதிவு செய்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

2. அன்பழகன்:

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

3. துணை முதல்வர் ஓபிஎஸ்:

தேனி பெரியகுளம் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

4.திமுக தலைவர் ஸ்டாலின்:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

4. தமிழிசை சவுந்தர ராஜன் :

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது கணவருடன் சென்று வாக்களித்தார். தமிழிசை சவுந்தரராஜன்.

5. புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி:

மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று வாக்களித்தார்.

6. நடிகை குஷ்பு:

நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது வாக்கினை பதிவு செய்தார்.

7. ப.சிதம்பரம்:

சிவகங்கையில் கண்டனூர் பெத்தாள் ஆச்சிபள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்

8. கார்த்தி சிதம்பரம் :

9.வைகோ:

கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

மேலும் படிக்க.. மும்முரமாக அரங்கேறும் வாக்குப்பதிவு… வரிசையில் நின்று வாக்களிக்கும் தலைவர்கள்

10. மு. க ஆழகிரி :

மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று தனது வாகினை பதிவு செய்தார். மு.க.அழகிரி.

11. கனிமொழி :

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் தூத்துக்குடியின் திமுக வேட்பாளர் மற்றும் மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழி.

12. டிடிவி தினகரன் :

13. டி. ராஜேந்திரன் :

சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்கு சாவடியில் இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வாக்களித்தார்.

14. தேமுதிக தலைவர் விஜயகாந்த் :

குடும்பத்துடன் சென்று சென்னை சாலிகிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் வாக்களித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

15. சீமான் :

சென்னை சாலிகிராமத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.

Tamilnadu General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment