கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பகல் நேரங்களில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளில் உள்ள பேட்டரிகள் தொடர்ந்து திருடு போய் வந்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து காரமடை காவல் நிலையத்தில் லாரி உரிமையாளர்கள் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பெயரில் காரமடை காவல் ஆய்வாளர் ஞானசேகர் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் மற்றும் குற்றப்பிரிவு காவலர் ராமமூர்த்தி ஆகியோர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தொடர்ந்து பேட்டரி திருட்டு ஈடுபட்டவரை தேடி வந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/B3znwG4KdDzX06vlXias.jpeg)
இந்நிலையில், நேற்று காலை காரமடை மேம்பாலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரசுதன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் காரமடை பகுதியில் தொடர்ந்து வாகன பேட்டரிகளை திருடி வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“