Advertisment

கருணாநிதி உடல்நிலை: பதற்றச் சூழலில் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்த மு.க.ஸ்டாலின்!

DMK Chief Karunanidhi Health Today: கருணாநிதி குணமடைய வேண்டி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் பிரார்த்தனை நடத்தினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கருணாநிதி உடல்நிலை: பதற்றச் சூழலில் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்த மு.க.ஸ்டாலின்!

DMK Chief M Karunanidhi Health: கருணாநிதியின் உடல்நிலை பற்றிய பேச்சே, அவரது கொள்கைக்கு மாற்றானவர்கள் மத்தியிலும் பேச்சாக இருக்கிறது. இதன் எதிரொலிதான் கோவில்களிலும் நடக்கும் பிரார்த்தனைகள்!

Advertisment

கருணாநிதி 4-ம் நாளாக சிகிச்சையில் இருக்கிறார். கோபாலபுரம் இல்லத்தில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை, அங்கு வி.ஐ.பி.க்கள் நலம் விசாரித்து வருகிறார்கள்.

திமுக தலைவர் கருணாநிதி, ஜூலை 26-ம் தேதி முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். ஜூலை 26-ம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கருணாநிதிக்கு சிறுநீரகப் பாதையில் நோய்த் தொற்றும், காய்ச்சலும் இருப்பதாக’ தெரிவிக்கப்பட்டது.

Karunanidhi Health News Today, DMK Chief M Karunanidhi Health, கருணாநிதி உடல்நிலை LIVE UPDATES:

கருணாநிதிக்கு 27-ம் தேதி இரவு வரை கோபாலபுரம் இல்லத்தில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது. 28-ம் தேதி அதிகாலை 12.30 மணியளவில்  குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை நேற்று (ஜூலை 28) மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் உள்பட பலர் நலம் விசாரித்தனர். 4-ம் நாளாக மருத்துவ சிகிச்சையிலும், 2-வது நாளாக காவேரி மருத்துவமனையிலும் இருக்கும் கருணாநிதியை இன்றும் (ஜூலை 29) விஐபி.க்கள் பலர் நலம் விசாரித்து வருகிறார்கள்.

M Karunanidhi Health, Kalaignar, Karunanidhi Admitted in Chennai Hospital, கருணாநிதி உடல்நிலை, கருணாநிதி சிகிச்சை, சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி DMK Chief Karunanidhi Health, Kauvery Hospital LIVE UPDATES:கருணாநிதி அனுமதிக்கப்பட்ட காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள்

M Karunanidhi Treatment Photo Released: LIVE UPDATES: கருணாநிதி உடல்நிலை LIVE UPDATES:

11.40 PM: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைவர் கலைஞருக்கு எதிர்பாராதவிதமாக பின்னடைவு ஏற்பட்டது உண்மை தான். ஆனால், தீவிர சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதி அவர்களின் உடல்நிலை சீராகி வருகிறது. எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமல், தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

publive-image

 

11.20 PM - மு.க.அழகிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "அப்பா நன்றாக இருக்கிறார்; அதனால் தான் வீட்டுக்குச் செல்கிறேன். அப்பாவுடன் பேசிவிட்டு தான் செல்கிறேன்" என்றார்.

11.10 PM -   திமுக முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.

11.00 PM - காவிரி மருத்துவமனையில் லேசான தடியடி. கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி.

publive-image

10.50 PM - மருத்துவமனையில் இருந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

10.40 PM - மீண்டும் தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா, "கருணாநிதி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிவிட்டார். பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் இருந்து மீண்டும் வீட்டிற்கு செல்ல வழிவிடுங்கள்" என கோரிக்கை விடுத்தார்.

10.30 PM - தொண்டர்கள் அமைதியாக இருக்கும்படி, போலீசார் ஒலிப்பெருக்கியின் மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

10.15 PM - திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கருணாநிதியின் உடல்நிலையில், தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், அது மருத்துவ குழுவால் சீர் செய்யப்பட்டுவிட்டது. வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

10.10 PM - திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் காவிரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

09.50 PM - கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் இன்று தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின் அவரது உடல்நிலை சீராகி வருகிறது. தொடர்ந்து, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளார்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

publive-image கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

09.35 PM: இன்னும் சில மணி நிமிடங்களில் மருத்துவ அறிக்கை வெளியாகவுள்ளது.

09.00 PM: கருணாநிதியின் குடும்பத்தார் பெரும்பாலானோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

08.40 PM: சேலத்தில் நாளை கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, உடனடியாக முதல்வர் பழனிசாமி சென்னை திரும்புகிறார். இன்று நள்ளிரவு 1 மணியளவில் அவர் சென்னை திரும்புகிறார்.

08.00 PM: காவேரி மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை அமைந்துள்ள ஆழ்வார்பேட்டை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையிலும் தொண்டர்கள் கலையாமல் அங்கேயே உள்ளனர்.

07.45 PM: கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்னும் சற்று நேரத்தில் அறிக்கை வெளியிடுகிறது.

07.35 PM: 'திமுக தலைவர் கருணாநிதிக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்' என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

07.00 PM: திமுக தலைவர் கருணாநிதி நன்றாக இருப்பதாக சொன்னார்கள்; அவர் நூறாண்டு வாழ வேண்டும் - காவேரி மருத்துவமனையில் நடிகர் செந்தில் பேட்டி.

publive-image

06.43 PM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்துவிட்டு காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் சபாநாயகர் தனபால்.

06.30 PM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு அப்போலோ மருத்துவமனை இயக்குநர் பிரீத்தா ரெட்டி, நடிகர் செந்தில் வருகை

4:40 PM: வைகோ அளித்த பேட்டியில், ‘கருணாநிதியின் உடல்நிலை வெகுவாக முன்னேறியிருக்கிறது. கோபாலபுரம் வீட்டை விட்டு வெளியே வந்தபோது தொண்டர்கள் எழுப்பிய வாழ்த்து கோஷம் அவரது நாடி நரம்புகளில் புத்துணர்ச்சியை பாய்ச்சியிருக்கிறது என என்னிடம் மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டார், அதனால்தான் மருத்துவமனைக்கு வந்த 20 நிமிடங்களில் ரத்த அழுத்தம் சீராகியிருக்கிறது’ என்றார்.

4:00 PM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.வும் வந்து நலம் விசாரித்துவிட்டு சென்றார்.

3:00 PM: கருணாநிதி சிகிச்சை புகைப்படத்தில் வெங்கையா நாயுடு, பன்வாரிலால் புரோஹித் ஆகியோருடன் மு.க.ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள் மற்றும் மருத்துவர்கள் இருந்தனர்.

2:40 PM: கருணாநிதியை குடியரசு துனைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் நேரில் பார்த்த புகைப்படத்தை கருணாநிதி குடும்பத்தினர் வெளியிட்டனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரது சிகிச்சை புகைப்படம் வெளியிடப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. சிகிச்சை புகைப்படத்தை வெளியிட வேண்டும் என கருணாநிதியே அப்போது அறிக்கை விட்டது குறிப்பிடத்தக்கது.

1:50 PM: கருணாநிதியின் குடும்பத்தினரை தவிர்த்து இதுவரை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, அவருடன் சென்ற ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் ஆகிய இருவர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கருணாநிதியை நேரில் பார்த்திருக்கிறார்கள்.

1:40 PM: கருணாநிதியை நலம் விசாரித்தது குறித்து குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ‘காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தேன். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்தேன். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அவர் விரைவில் குணம் அடைய வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டார்.

1:00 PM: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனைக்கு வந்தார். கருணாநிதி குறித்து அவரும் ஸ்டாலினிடம் கேட்டார். 

12:45 PM: வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனையில் கருணாநிதி நலம் விசாரித்தபோது முரளிதர் ராவ், தமிழிசை, இல.கணேசன், அமைச்சர் ஜெயகுமார் உடன் இருந்தனர். வெங்கையா வெளியே வந்த பிறகு, வைகோ உள்ளே சென்றார்.

12:30 PM: வெங்கையா நாயுடு வந்த அதே நேரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். ஆனால் துணை குடியரசு தலைவருக்கு மேற்கொண்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக வைகோ உள்ளே நுழைய முடியவில்லை. எனவே போலீஸாருடன் வைகோ வாக்குவாதம் செய்தார்.

12:20 PM: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து கருணாநிதியின் உடலநலத்தை விசாரித்தார்.

12:00 PM: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலத்தை விசாரித்தார். பிறகு நிருபர்களிடம் பேசிய சீமான், ‘ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோரிடம் கலைஞர் உடல்நலம் பற்றி விசாரித்தேன். குணம் அடைந்து வருவதாக தெரிவித்தனர். அவர் பூரண குணம் அடைந்து மீண்டும் அரசியல் பணி செய்ய வேண்டும் என வாழ்த்துகிறோம்.

கருணாநிதி உடல்நலம் குறித்து நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் சிலர் அவதூறு பரப்புகின்றனர். முகம் தெரியாத நபரின் பதிவுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது, எனினும் வருந்துகிறோம்’ என்றார் சீமான்.

11:45 AM: பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ், பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரித்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய முரளிதர் ராவ், ‘கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழக மக்களுக்கு சேவை புரிந்துள்ளார் கருணாநிதி. நாடு முழுவதும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கு சேவை புரிய வேண்டும்’ என கூறினார்.

11:30 AM: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான மேற்குவங்க எம்.பி. டெரிக் ஓ பிரையன் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தார். பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், ‘கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன். அவர் குணமடைய மேற்கு வங்க மக்கள் சார்பில் பிரார்த்திக்கிறோம்’ என்றார்.

11:00 AM: கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், ‘கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் பூரண குணமடைய வேண்டும்’ என கருத்து தெரிவித்தார்.

10:30 AM: திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் 2-வது நாளாக திரண்டு நிற்கிறார்கள். கருணாநிதி குணமடைய வேண்டி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் பிரார்த்தனை நடத்தினர். நேற்று இரவு கருணாநிதி உடல்நிலை சீராக இருப்பதாக வெளியான மருத்துவ அறிக்கையை தொடர்ந்து திமுக தொண்டர்கள் சற்றே மன நிம்மதியுடன் காணப்பட்டனர்.

9:30 AM: கருணாநிதி அனுமதிக்கப்பட்ட காவேரி மருத்துவமனைக்கு கனிமொழி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்து வந்தனர். கருணாநிதியின் குடும்பத்தினர் பெரும்பாலானோர் அங்கு முகாமிட்டிருக்கிறார்கள்.

9:00 AM: சென்னையில் அரசு ரீதியான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Karunanidhi Health-M Karunanidhi Treatment Photo Released: LIVE UPDATES:

 

 

Mk Stalin Dmk M Karunanidhi Venkaiah Naidu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment