Advertisment

மதிய உணவு தொடர்பாக புகார் தெரிவித்த ஐகோர்ட் நீதிபதி; நீதிமன்ற ஊழியர் சஸ்பெண்ட்

மதிய உணவு தொடர்பாக புகார் தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி; தஞ்சை நீதிமன்ற ஊழியர் சஸ்பெண்ட்

author-image
WebDesk
New Update
மதிய உணவு தொடர்பாக புகார் தெரிவித்த ஐகோர்ட் நீதிபதி; நீதிமன்ற ஊழியர் சஸ்பெண்ட்

Arun Janardhanan

Advertisment

Madras HC judge complained over lunch, got court staffer suspended: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், "எந்தவொரு பொது ஊழியரும் முகலாய பேரரசர்களின் உலகத்தை கற்பனை செய்யவோ அல்லது வாழவோ முடியாது" என்று குறிப்பிட்டு, தமிழக காவல் துறையில் காலனித்துவ ஆர்டலி முறையைப் பற்றி கருத்து தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு, நீதிபதி சுப்ரமணியம் உத்தரவிட்டப்படி மதிய உணவு கிடைக்காததால் தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் நீதிமன்ற ஊழியர் ஒருவர் டிசம்பர் 2021 இல் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் எழுந்துள்ளது.

தனக்காக கொண்டு வரப்பட்ட உணவு கலப்படம் செய்யப்பட்டதாகவும், தெரியாத இடத்திலிருந்து வாங்கப்பட்டதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் நீதிபதி சுப்பிரமணியம் தெரிவித்தார். உணவில் நைலான் ரப்பர் பேண்டுகள் இருப்பதைக் கண்டறிந்த அவர், அதுவும் சுகாதாரமற்ற முறையில் பரிமாறப்பட்டதாகக் கூறினார்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் மேலும் 5 மருத்துவ கல்லூரிகள்.. அடுத்த மாதம் டெல்லி பயணம் – மா.சுப்பிரமணியன்

கோவில் நகரமான கும்பகோணத்திற்கு நீதிபதி சுப்ரமணியம் சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதியிடம், நீதிபதி சுப்பிரமணியம் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கூறியதையடுத்து சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதித்துறை உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூனியர் நீதிமன்ற ஊழியர் ஜி.மணிகண்டன் மீதான இடைநீக்க உத்தரவு ஜனவரி 5, 2022 அன்று "நிர்வாக வசதிக்காக" ரத்து செய்யப்பட்டது. இடைநீக்கம் தொடர்பான "நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள்" ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மணிகண்டன் "சேவையில் மீண்டும் பணியில் அமர்த்தப்படுகிறார்" என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி சுப்ரமணியம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தொலைபேசியில் கூறுகையில் “என்னுடைய உணவுக்கு நான் எப்போதும் பணம் செலுத்துகிறேன். அன்றைய தினம், ஒரு ஒழுக்கமான சைவ உணவகத்தில் உணவு வாங்குமாறு ஊழியர்களிடம் கேட்டேன். இந்த பிரச்னைகளை கவனித்த பின், மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்தேன். அவர் விசாரணை நடத்தியதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது,'' என்றார்.

நீதிபதி சுப்ரமணியம், அவருக்கு உணவு வழங்கப்பட்ட அரசு தங்கும் இடம், "அசிங்கமான கழிவறையுடன் கூடிய சுகாதாரமற்ற பழைய கட்டிடம்" என்று கூறினார். அரசு விருந்தினர் மாளிகையின் பிரதானத் தொகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பழைய கட்டிடத்தின் திறந்த மண்டபத்தில் தனக்கு உணவு வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

“மற்ற அரசு வசதிகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டன. அவர்கள் உணவைக் கொண்டு வந்த பிறகு, சுத்தம் செய்யப்படாத ஹாலில் ஒரு மேஜை இருந்தது, அதன் மீது அவர்கள் உணவு பொட்டலங்களைத் திறக்கத் தொடங்கினர், அவர்கள் சுகாதாரமற்ற முறையில் உணவு பாக்கெட்டுகளை திறந்து, அதே பிளாஸ்டிக் கவர்களில் பரிமாறினார்கள். அவர்கள் ரப்பர் பேண்டுகளை அகற்றாததால், ரப்பர் பேண்டுகள் உணவில் விழுந்தன,” ”என்று நீதிபதி சுப்பிரமணியம் கூறினார்.

கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட மணிகண்டனுக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவில், அவர் "அவரது நீதிபதியால் (லார்ட்ஷிப்) அறிவுறுத்தப்பட்டபடி சரியான கவனிப்புடன் அவரது நீதிபதிக்கு சரியான மதிய உணவை வழங்கத் தவறிவிட்டார், அதன் மூலம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973 இன் விதி 20 (ஒருங்கிணைவு மற்றும் கடமையில் அர்பணிப்பு) மீறினார்,” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

சம்பவம் குறித்து அறிந்த ஆதாரங்களின்படி, நீதிபதி சுப்பிரமணியம் டிசம்பர் 26, 2021 அன்று கும்பகோணத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். மூத்த நீதிபதி ஒருவர், “நெறிமுறைப்படி பணியில் இருந்த ஜூனியர் நீதிமன்ற ஊழியரிடம் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் உணவகத்தில் இருந்து சைவ மதிய உணவை வாங்கி வரச் சொன்னார். அவர் அறிவுறுத்தியபடி, கும்பகோணத்தில் தற்போது இதுபோன்ற ஹோட்டல்கள் இல்லை... பல பிரபலமான சைவ உணவகங்கள் உள்ளன. எனவே நீதிமன்ற ஊழியர்கள் அந்த ஊரில் உள்ள சிறந்த சைவ உணவகத்தில் இருந்து மதிய உணவை வாங்கி கொண்டு வந்தனர்.

இதனால் கோபமடைந்த நீதிபதி சுப்ரமணியம், மாவட்ட நீதிபதியிடம் இந்தப் பிரச்னையை எழுப்பி, "கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரினார்" என்று நீதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

உடனே மாவட்ட நீதிபதி மணிகண்டனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் நீதிமன்றப் பணியாளர், “சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன் அனுமதி பெறாமல், தலைமையகத்தை (தஞ்சாவூர்) விட்டுச் செல்லக் கூடாது” என்றும் இடைநீக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை காலி செய்யும் காவல் துறை உத்தரவை எதிர்த்து ஒரு அதிகாரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், ஆகஸ்ட் 12 அன்று தனது உத்தரவில், "எந்த ஒரு பொது ஊழியரும் முகலாய பேரரசர்களின் உலகத்தை கற்பனை செய்யவோ வாழவோ முடியாது என்று நினைவுபடுத்தினார். அரசியலமைப்பின் கீழ் உள்ள அத்தகைய அதிகாரிகளான 'பொது ஊழியர்கள்' அரசியலமைப்பில் வகுக்கப்பட்ட கொள்கைகளின்படி மற்றும் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகளின்படி பொதுமக்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டுள்ளனர்,” என்று கூறினார்.

அந்த உத்தரவில், “...ஒழுக்கமற்ற உயர் போலீஸ் அதிகாரிகள் சீருடை படைகளில் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதில் தங்கள் மன உறுதியை இழக்கிறார்கள் என்று கூற தேவையில்லை,” என்று நீதிபதி கூறினார்.

தமிழக காவல்துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு மட்டும் மாநிலம் முழுவதும் 1,000 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தாலும், நீதித்துறையும் விதிவிலக்கல்ல, அங்கு ஆடர்லி அமைப்பு ”வேறு” வகையில் செயல்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர். இந்த நீதிபதிகளின் கூற்றுப்படி, ஒரு பதவியில் இருக்கும் நீதிபதிக்கு நான்கு போலீஸ்காரர்களும், துணை ஆய்வாளர் நிலை அதிகாரியும் கைத்துப்பாக்கியுடன் இருக்க உரிமை உண்டு; அவர்களுக்கு மூன்று வீட்டு உதவியாளர்கள், வீடு மற்றும் அலுவலகத்தில் தலா இரண்டு அலுவலக உதவியாளர்கள் உள்ளனர். பல சந்தர்ப்பங்களில், இந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ஆடர்லி வேலைகளைச் செய்கிறார்கள், "காவல் துறையைப் போலவே" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதித்துறையிலும் ஒழுங்கு முறை உள்ளது என்பதை நீதிபதி சுப்ரமணியம் ஒப்புக்கொண்டார். "நான் சொல்லக்கூடியது என்னவென்றால், நான் எனது நீதித்துறை ஊழியர்களை உணவு சமைக்க பயன்படுத்துவதில்லை. எனது ஊழியர்கள் காலை 9 மணிக்கு வந்து மாலை 4 மணிக்குப் புறப்படுவார்கள்; என் மனைவி வீட்டில் சமைப்பார்,” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment