நிபந்தனையுடன் வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

நிபந்தனையுடன் வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இம்மாதம் 28 ஆம் தேதிக்குள் நாடு திரும்பிவிட வேண்டும்.

நிபந்தனையுடன் வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இம்மாதம் 28 ஆம் தேதிக்குள் நாடு திரும்பிவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. சுமார் 4 கோடி ரூபாய்க்கு அனுமதி பெற்று 305 கோடி அந்நிய முதலீடு பெற்றுதாகவும். முறைகேடாக மூதலீடுகளை பெற ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் இதற்காக அவர் பலன் அடைந்ததாக கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகாததால் அவரை தேடப்படும் நபராக அறிவித்து அவருக்கு எதிராக 2 லுக் அவுட் நோட்டீஸ்களை சிபிஐ பிறப்பித்தது. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக கடந்த ஆண்டு (2017) ஜூன் 16, ஜூலை 28 ஆகிய தேதிகளில் இந்த நோட்டீஸ்கள் பிறப்பிக்கப் பட்டன.

இந்த இரண்டு லூக் அவுட் நோட்டீஸை எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் சென்னை உயர் நீதிமன்ற அதிகார வரம்புக்கு உட்பட்டது இந்த நோட்டீஸ் இல்லை என்றும் எனவே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டாது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திர சூட் ஆகியோர் கொண்ட அமர்வு. சிபிஐ சார்பில் வெளியிடப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ்களுக்கு தடை விதிக்க மறுத்தனர். கார்த்தி சிதம்பரத்தின் மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் அமர்வு 2 மாதங்களுக்குள் முடிவு எடுக்க நீதிபதிகள் உத்தர விட்டனர்.

அதுவரை அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ்கள் செயல்பாட்டில் இருக்கும் என்ற தெரிவித்த நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாடு செல்ல அனுமதி கோரினால் தகுதியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றமே முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்தனர்.

ஊழல் வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) தொடர்பான பிற மனுக்களை தாங்களே விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தான் வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால், அனுமதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரியும், தனக்கு எதிரான லூக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஷ் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்பு கடந்த புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் குடும்பத்தினர், மற்றும் சொத்துக்கள் அனைத்தும் இந்தியாவில் மட்டுமே இருப்பதால் வெளி நாட்டிற்கு தப்பி சென்று விடுவதாக கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை எனவும், சிபிஐ விசாரணைக்கு கார்த்தி தவறாமல் ஆஜராகி, முழு ஒத்துழைப்பு தந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு சிபிஐ தரப்பில், அவசர தேவைக்கு வெளிநாடு செல்வதற்கு ஆட்சேபனை இல்லை . ஆனால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடனான வியாபார நோக்கிற்காக வெளிநாடு செல்வதால், சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால், அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்க கோரிய மனு மீதான உத்தரவை இன்று அறிவிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அவர்வு, வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு நீதிபதிகள் அனுமதி அளிப்பதாகவும், இம்மாதம் 28 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்றும், வெளிநாட்டில் இருக்கும்போது, வழக்கு விசாரணையை பாதிக்கும் வகையில் செயல்பட கூடாது என்றும், பண பரிவர்த்தனை செய்யக் கூடாது என்றும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கை தொடர்ந்தது சிபிஐ விசாரணை நடத்தலாம் எனவும் விசாரணை எந்த பாதிப்பையும் மனுதரார் எற்படுத்த கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய கோரிய மனுவை மார்ச் முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close