Advertisment

தயாநிதி மாறனுக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டிஸ்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

அக்டோபர் 22ம் தேதிக்குள் வருமான வரித்துறைக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தயாநிதி மாறன், வருமான வரி மறுசீராய்வு மனு, ஏர்செல் மேக்சிஸ் வழக்கு

தயாநிதி மாறன், வருமான வரி மறுசீராய்வு மனு

இரண்டு  நிதியாண்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்ய தயாநிதி மாறன், சன் டைரக்ட், சவுத் ஆசியன் எப்.எம் நிறுவனங்களுக்கு எதிராக அனுப்பிய  நோட்டீஸ் மீது வரும் 22 ஆம் தேதிவரை மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

Advertisment

தயாநிதி மாறன் : நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

2008- 2009, 2009- 2010 ஆகிய ஆண்டுகளுக்கான தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்ய வருமான வரித்துறை தயாநிதி மாறன், சன் டைரக்ட், சவுத் ஆசியன் எப்.எம் நிறுவனங்களுக்கு  நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தயாநிதி மாறன் மற்றும் இரண்டு நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வருமான வரித் துறையின் சார்பில் மீண்டும் மறு ஆய்வு கோரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அதிகாரம் இல்லை. எனவே 2015 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்ய வேண்டும்.

இந்த நோட்டீஸ் என்பது ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் அடிப்படையில் வருமான வரித்துறை அனுப்புள்ளது. ஆனால் அந்த வழக்கில் இருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  விடுவிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்கான காரணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.

தயாநிதி மாறன் விளக்கம்

மேலும் சன் டைரக்ட்  நிறுவனம் தன்னுடைய சகோதரர் நிறுவனம் எனவும் அந்த நிறுவனத்துக்கும் எனக்கும் எந்தவிதத்திலும் பொருளாதார ரீதியாக அல்லது நிதி தொடர்புகளும் இல்லை. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிக்கையின் அடிப்படையில் சன் டைரக்ட் நிறுவனம், கலாநிதிமாறன், பிரியா மாறன், எனக்கும் (தயாநிதி மாறன்) வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

குற்றப்பத்திரிக்கை அடிப்படையில் வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடியாது எனவும் அதே போன்று எனக்கும் சன் டைரக்ட் நிறுவனத்தில் பொருளாதார ரீதியாக அல்லது நிதி தொடர்புகள் இருந்தது என்பதற்கான எந்த விதமான ஆதாரங்களையும் வருமானவரித் துறை தாக்கல் செய்யவில்லை எனவே 2 நிதியாண்டுக்கு வருமான வரி மறு ஆய்வுக்கு, வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து  செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

உயர் நீதிமன்ற விசாரணை

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம்  சம்பந்தப்பட்டவர்களின்  வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்ய நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதில் ஆரம்ப நிலையிலேயே நீதிமன்றம் தலையிட முடியாது.

மேலும் ஒரு குடும்ப உறுப்பினர்கள் பொருளாதார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சி பெரும் பொழுது அந்த குடும்பத்தை சார்ந்த ஒருவர் உயர்பதவியில் இருக்கும் நிலையில் அவர்களுக்கு  ஆதரவாக அல்லது  உயர் பதவியிலுள்ள உள்ளவர் தனது செல்வாக்கை பயன்படுத்தினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமானவரித் துறை விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

தொழில்நுட்பரீதியாக நாடு வளர்ச்சி அடையும் பொழுது அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  ஊழல் நடைபெறுவதாகவும் தொழில்நுட்பரீதியாக பணப் பரிமாற்றம் செய்யும் போதும் பலர் அரசை ஏமாற்றுகிறார்கள் என தெரிவித்த நீதிபதி சுப்பிரமணியம் இது போன்ற ஊழல்கள் நாட்டை புற்று நோய்போல் அழித்து விட்டதாகவும் இதனை நீதிமன்றங்கள் ஊக்குவிக்க கூடாது என தெரிவித்தார்.

தயாநிதிமாறனின், சவுத் ஆசியன் எப்.எம் நிறுவனம் மற்றும் சன் டைரக்ட் டி.வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு வருமான வரித் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட மறு ஆய்வு நோட்டீஸை ரத்து செய்ய கோரிய மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, தயாநிதிமாறனின், சவுத் ஆசியன் எப்.எம் நிறுவனம் மற்றும் சன் டைரக்ட் டி.வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபட்டது. அந்த தரப்பு வாதங்களை முழுமையாக கவனத்தில் கொள்ளலாம் தனி நீதிபதி தங்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் எனவே அந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் குலுவாடி.ஜி.ரமேஷ், கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், மனு தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.  அதுவரை வருமான வரி துறை மறு ஆய்வு (Reopen) நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தி விசாரணையை தள்ளிவைத்தனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment