Advertisment

ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு: சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக திண்டிவனம் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Madras High Court on AIADMK CV Shanmugam CM MK Stalin defamation case Tamil News

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகவும், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் சி.வி.சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கடந்த 2022-ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க. பிரமுகர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சி.வி.சண்முகத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

Advertisment

திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனு இன்று திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதி, 'சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான், அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய முடியுமா?' என்று காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, அதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாலேயே இந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment