பெற்றோர்களுக்கு உடல்நிலை சரியில்லை : அதிரசம் விற்று குடும்ப பொறுப்பை சுமக்கும் சிறுவர்கள்!

அதிரசம் மூலம் தினமும் ரூ. 150 சம்பாதித்தாலும், நாள் ஒன்றுக்கு 5 பேர் கொண்ட குடும்பத்தை நடத்த போதாது என்று வருத்தம்

By: September 2, 2020, 2:43:57 PM

கொரோனா ஊரடங்கின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வருமானம், வருவாய் ஆதாரம், வாழ்வு என அனைத்தும் கேள்விக்குறியாய் இருக்கின்ற நிலையில் சிறுவர்கள் உட்பட அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றோம்.

மதுரை செல்லூர் பகுதியில் வசித்து வருகின்றனர் பூமிநாதன் – லதா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் உள்ளனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில் அம்மா மற்றும் அப்பாவை பராமரிக்கும் பொருட்டு குழந்தைகள் அதிரசம் விற்பனை செய்து வருகின்றனர்.

கலையரசனும், தாமோதரனும் அதிகாலையிலேயே வீட்டில் இருந்து கிளம்பி, சைக்கிளில் அதிரசத்தை வைத்துக் கொண்டு தெருத்தெருவாக விற்பனை செய்து வருகின்றனர். அவர்களின் அதிரத்திற்கு விளம்பரமாக “இங்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட, சுவையான அதிரசம் கிடைக்கும்” என்று போர்டு ஒன்றில் எழுதி விற்பனை செய்து வருகின்றனர் இந்த சிறுவர்கள். இவர்களின் நிலை குறித்து அக்கம் பக்கத்தினர் பெரும் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த அதிரசம் மூலம் தினமும் ரூ. 150 சம்பாதித்தாலும், நாள் ஒன்றுக்கு 5 பேர் கொண்ட குடும்பத்தை நடத்த அப்பணம் போதாது என்றும், அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Madurai brothers selling sweets for family income

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X