‘கமல்ஹாசன், முதுகெலும்பு இல்லாத தொடை நடுங்கி’ என விமர்சித்துள்ளார் ஹெச்.ராஜா.
‘இந்து தீவிரவாதம் என்று கொளுத்திப் போடுவது சுயரூபமா? இல்லை ‘விஸ்வரூபம் 2’ புதுப்படம் ஓடவைக்க பொய் விஸ்வரூபமா?’ என ட்விட்டரில் டைமிங்காக பதிவிட்டுள்ளார் பாஜகவின் தமிழகத் தலைவரான தமிழிசை செளந்தரராஜன்.
அதை ரீட்வீட் செய்துள்ள பாஜகவின் தேசிய இணைச் செயலாளரான ஹெச்.ராஜா, “முதுகெலும்பு இல்லாத தொடை நடுங்கியின் பிதற்றல் அவ்வளவுதான். பி ஜே இவரின் கோழைத்தனத்தை தோலுரித்துக் காட்டிவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
,
மேலும், “ஒரு ஏரியைக் காணவில்லையாம். தன் ரசிகர்களை தேடச்சொல்லப் போகிறேன் என்கிறார் கமல். மதுரை உயர்நீதிமன்றமே ஏரியின் மீதுதான் உள்ளது. பாவம் மக்கள்” என்று இன்னொரு ட்வீட்டில் கூறியுள்ளார் ஹெச்.ராஜா.
,
பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா மற்றும் தமிழிசை செளந்தரராஜன் இருவருமே அடுக்கடுக்கான விமர்சனங்களை கமல்ஹாசன் மீது வைத்து வருகின்றனர்.