Advertisment

பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை... இளையராஜாவுக்கு ஸ்டாலின்- தலைவர்கள் வாழ்த்து

இளையராஜாவுக்கு இந்திய அரசு ஏற்கெனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்து இருக்கிறது. அந்தவகையில் இப்போது அவரை ராஜ்யபசபா நியமன எம்.பி.யாக அறிவித்து மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Ilaiyaraaja

Maestro Ilaiyaraaja nominated to Rajya Sabha

இசைஞானி இளையராஜா ராஜ்யபசபா நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

216 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், 12 உறுப்பினர்கள் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுபவர்கள். அப்படி நியமிக்கப்படுபவர்கள் பொதுவாக சட்டம், விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களாக இருக்க வேண்டும்.

அதன்படி மாநிலங்களவையில் தற்போது நியமன உறுப்பினர்களாக ரஞ்சன் கோகாய், மகேஷ் ஜேட்மலானி, சோனல் மான்சிங், ராம் ஷகால், ராகேஷ் சின்ஹா ஆகிய ஐந்து பேர் உள்ளனர்.

தற்போது, இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா, ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியரும், பிரபல இயக்குனர் ராஜமெளலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெகடே, ஆகியோர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இளையராஜாவுக்கு இந்திய அரசு ஏற்கெனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்து இருக்கிறது. அந்தவகையில் இப்போது அவரை ராஜ்யபசபா நியமன எம்.பி.யாக அறிவித்து மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, புதிய நியமன உறுப்பினராகவிருக்கும் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், "தலைமுறைகளை கடந்து மக்களை தன்பால் ஈர்த்த படைப்புலக மேதை இளைராஜா. அவரது இசை பல்வேறு உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கக்கூடியது. எளிய பின்னணியில் இருந்து இந்த அளவுக்கு சாதனைகளை படைத்தவரின் வாழ்க்கை பயணம்  மிகவும் ஊக்கமளிக்கக்கூடியது. அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது," என தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் வாழ்த்து

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

கமல்ஹாசன் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து

இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Ilaiyaraaja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment