சென்னையில் ஆங்காங்கே சாரல் மழை!!!

சென்னையில் காலை 10.30 மணி அளவில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வௌகிறது. மேலும் வெப்ப சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்றழுத்த தாழ்வு நிலவி வருவதால் தென் தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை முதல் சென்னை பல்வேறு பகுதிகளில் கரு மேகம் காணப்பட்டு வந்த நிலையில், இப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

கோடை வெயிலில் வாடி வறண்டுள்ள பூமியில் மழை பெய்வதை கண்டதும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

×Close
×Close