தஞ்சை பெரிய கோயில் சிற்பங்களுடன் சல்லாபம் செய்வதை போல இளைஞர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான்(28), திருச்சி கல்லுக்குழியில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி, உணவு டெலிவரி செய்யும் ஏஜென்ட்டாக பணிபுரிந்து வருகிறார். விடுமுறையை கழிக்க, தஞ்சையில் உள்ள பெரிய கோவிலுக்கு, தனது நண்பர்களுடன் கடந்த ஜூன் 5ம் தேதி சென்ற அந்த இளைஞர், கோயிலில் இருந்த பெண் சிற்பங்களுடன் சல்லாபத்தில் ஈடுபடுவது போன்று புகைப்படம் எடுத்து, அதனை சமூக தளங்களில் வேறு பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவுகளுக்கு ஏராளமானோர் ஹாஹா, லவ் என்று ரிப்ளை கொடுத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க – News in Tamil Live Updates : தமிழ்நாடு லேட்டஸ்ட் செய்திகள் லைவ்
இதுகுறித்து திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். சகோதரி வீட்டில் இருந்த முஜிபுர் ரகுமான் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Man arrested for objectionable photos with thanjavur big temple sculptures
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை