சென்னை பெருங்குடியில் ஸ்பா என்ற வேடத்தில் பாலியல் தொழில் நடத்தி வந்த நபரை காவல்துறை கைது செய்தனர். மேலும் அங்கு வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணை மீட்டனர்.
மக்கள் தங்களை அழகுபடுத்துவதற்காகவும் ஓய்வெடுக்க மசாஜ் பெறுவதற்காகவும், நகரில் உள்ள ‘ஸ்பா’ போன்ற இடங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட இடத்தில் பாலியல் தொழில் நடத்திய வந்த நபரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
கோதண்டராமர் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்பா ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அதிரடி சோதனை நடத்திய காவல்துறை, பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரதீப் என்பவரை கைது செய்து, அங்கிருந்த வட மாநிலப் பெண் ஒருவரை காவல்துறை மீட்டனர். மேலும், மீட்கப்பட்ட பெண்ணை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil