Advertisment

கோவில் வளாகத்தில் மது அருந்திய இளைஞர்கள்.. தட்டிக் கேட்டவர் கொலை.. திருநெல்வேலியில் பதற்றம்

திருநெல்வேலியில் உள்ள மேல செவல் கிராமத்தில் இறந்தவர்களும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பதற்றம் நிலவுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
Man who scolded gang for drinking on Tamil Nadu temple premises killed

கிருஷ்ணன் கோவிலில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அவரிடம் தகராறு செய்து கொலை செய்தவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேல செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் 51 வயதான கிட்டு சாமி என்ற கிருஷ்ணன். இவர் ஜன.15ஆம் தேதி அங்குள்ள கோவில் வளாகத்தில் மது அருந்திக் கொண்டிருந்த நபர்களை தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் அவரை அடித்துக் கொன்றுள்ளனர். இவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார். இந்த நிலையில் 18-24 வயதுடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணன் கோவிலில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அவரிடம் தகராறு செய்து கொலை செய்தவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “உறவினர்கள் கிருஷ்ணனின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். அவர்கள் அரசிடம் இருந்து அரசு வேலை, பொருளாதார உதவியை எதிர்நோக்குகின்றனர்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment