Advertisment

திட்டமிட்டு ஓ.பி.எஸ்-ஐ அவமானப் படுத்தினர்: மருது அழகுராஜ் புகார்

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய மருது அழகுராஜ், அதிமுக பொதுக்குழுவில் இ.பி.எஸ் தரப்பு ஓ.பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக பரபரப்பு குற்றம்சாட்டினார்.

author-image
WebDesk
New Update
marudhu alaguraj, aiadmk, namathu amma daily news paper, ops, eps,

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய மருது அழகுராஜ், அதிமுக பொதுக்குழுவில் இ.பி.எஸ் தரப்பு ஓ.பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக பரபரப்பு குற்றம்சாட்டினார்.

Advertisment

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், மருது அழகுராஜ், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது மருது அழகுராஜ் பேசியதாவது:

ஓ.பி.எஸ் இ.பி.எஸ் இருவரும் இணைந்து இயக்கத்தை முன்னெடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை பொய்துப்போய், அதிமுகவின் பொன் விழா ஆண்டில் பிளவை நோக்கிச் செல்கிறது என்ற வருத்தத்தில் இருந்ததால் விடுவித்து கொண்டேன்.

யாருடைய சுயநலம் இந்த பிளவிற்கு காரணம் என தெரியும். உட்கட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. ஒரே வாக்கில் இருவரும் வெற்றி பெற்றனர். பொதுக்குழு தீர்மானம் உருவாக்கும் குழுவில் நானும் இருந்தேன். 23 தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு நான்தான் இரண்டு தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தேன்.

கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் நிறைந்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஆகியோர் உள்ளே வரும்போது நிர்வாகிகளுக்கு பின்னர் அமரவைக்கபட்டிருந்த கூட்டம் செவி கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் பேசினார்கள். ஜனநாயகத்தில் போட்டி வரலாம்; அதில் வெற்றிபெற சில யுக்திகள் உள்ளது.

அரைமணி நேரத்தில் ஒரு பொதுக்குழு கூட்டம் முடிந்தது என்றால் அது இந்த பொதுக்குழு தான், ஒரு பொதுக்குழு கூட்டம் நேரலை செய்யப்பட்டது என்றால் அது இந்த பொதுக்குழு கூட்டம்தான். திட்டமிட்டு ஓ.பி.எஸ் அவர்களை அசிங்கப்படுத்தி உள்ளனர். இவ்வளவு நடந்தும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை.

எந்த காலத்திலும் அதிமுகவின் பொதுச் செயலாளரை பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தேர்வு செய்ய முடியாது என்பது அதிமுகவின் அடிப்படை சட்டம். இன்று இருக்கக்கூடிய பணத்தை வைத்து அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களையும் வாங்க முடியும்.

ஆனால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் அட்டையை மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் வழங்கவில்லை. நில அபகரிப்பு போல அதிமுகவில் அரசியல் அபகரிப்பு நடைபெற்று வருகிறது.

எந்த தீர்மானம் என்று சொல்லாமலே தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது என்று கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என போடப்பட்ட தீர்மானமும் ரத்து செய்யப்படுகிறதா?

கூவத்துரில் சட்டமன்ற உறுப்பினர்களை டெண்டர் எடுக்கும் வசதி எடப்பாடி பழனிசாமியிடம் இருந்தது; அதனால், அன்று செங்கோட்டையன் முதல்வர் ஆகவில்லை. அன்று சட்டமன்ற உறுப்பினர்களை டெண்டர் எடுத்த எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களை டெண்டர் எடுக்க தயாராகி உள்ளார். இது ஒரு ஜனநாயக படுகொலை.

அதிமுக என்பதே ஒரு ஜாதி, ஆனல், இன்று ஒரு குழு மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது. ஜாஹ்டி ரீதியாக செயல்படத் தொடங்கி இருக்கிறது.” என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ops Eps Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment