Advertisment

மசினகுடி வலசை பாதை : பாதிப்பு விவரங்களை பிப்.14-க்குள் சமர்பிக்க வேண்டுகோள்

உதகை ஜிம்கானா க்ளப் சாலையில் அமைந்துள்ள வனவியல் விரிவாக்க கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விசாரணைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்

author-image
WebDesk
New Update
Masinagudi elephant corridor issue : People can send their grievances till Feb 2021

Elephant roaming in Masinagudi Photo credits Naresh Baskaran

முதுமலை புலிகள் காப்பகம் கோட்டத்தில் உள்ள சீகூர் சமவெளியில் யானை வழித்தடங்களின் புகைப்படங்களுடன் கூடிய அரசாணை 2010ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின் படி யானைகள் வலசை பாதையில் அமைந்திருக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 07/04/2011 அன்று உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிரித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பினை வழிமொழிந்த உச்ச நீதிமன்றம், மூன்று நபர்கள் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை அமைத்து ஆணையிட்டது.

Advertisment

மேலும் படிக்க : மசினகுடி வலசை பாதை : யானைகளுக்கு இருக்கும் அங்கீகாரமும் உரிமையும் மனிதர்களுக்கு இல்லையா?

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. வெங்கடராமன், ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய் மற்றும் வைல்ட் லைஃப் பர்ஸ்ட் அமைப்பின் தலைவர் ப்ரவீன் பார்கவ் அடங்கிய விசாரணை குழு நவம்பர் மாதம் மசினகுடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மேற்பார்வையிட்டது.

இந்நிலையில், வழித்தடம் குறித்து பாதிப்பிற்கு ஆளானவர்கள் தங்களின் பாதிப்பு விபரங்களை குறிப்பிட்டு, அதனை உறுதி செய்யும் ஆவணங்களையும் இணைத்து , ஆங்கில மொழிபெயர்ப்புடன், உதகை ஜிம்கானா க்ளப் சாலையில் அமைந்துள்ள வனவியல் விரிவாக்க கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விசாரணைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. காலை 10.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை, வருகின்ற 2021 ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வரை தங்களின் பாதிப்பு விபரங்களை அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Nilgiris
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment