Advertisment

தமிழக அமைச்சரவை கூடியது இதற்குத்தான்: வெளிவந்த ரகசியம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 74-ல் திருத்தம் செய்யப்பட்ட பின்னர் 1996ம் ஆண்டு மேயர் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடத்தப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Mayor elections indirect poll : தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்ய அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்று (20-ம் தேதி) மாலை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலமாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது உறுதி ஆகியிருக்கிறது.

Advertisment

முன்னர் தரப்பட்ட செய்தி கீழே:

மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்யும் முறையை மீண்டும் அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது அதிமுக அரசு. நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் இருக்கும் 15 மாநகராட்சி, 121 முனிசிபாலிட்டி மற்றும் 528 டவுன் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து முக்கிய அறிவிப்பாணை டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மறைமுக தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.  10 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே மறைமுக தேர்தல் குறித்து அதிமுக தலைவர்கள் நிர்வாகிகளுடன் பேசி வந்தனர். பல காரணங்கள் அடிப்படையில் இந்த முடிவுகள் எட்டப்பட்டதாக கூறினார் மூத்த அதிமுக தலைவர் ஒருவர். வேட்பாளர்கள் இந்த தேர்தலுக்காக செலவிடும் செலவீனங்கள் குறைக்கப்படும் என்றும் ஏற்கனவே வார்டுகளுக்கு வார்டுகள் பணம் செலவாகும் நிலையில் மேயர் தேர்தலுக்கும் தனியாக செலவுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மறைமுக தேர்தலுக்கு பிறகு சில கட்சிகளில் புதிய சீரமைப்புகள் உருவாவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறினார்.

2016ம் ஆண்டு மத்தியில் அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா இந்த பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று திட்டம் தீட்டியிருந்தார். இதனை 2018ம் ஆண்டு தான் தற்போது ஆளும் அரசு மாற்றியது குறிப்பிடத்தக்கது. முழு நகராட்சி, நகர பஞ்சாயத்து ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தருவதற்கு பதிலாக மறைமுக தேர்தல் மூலமாக ஒரு நகர்புற உள்ளாட்சி தலைவர் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர் நேரடியாக தன்னுடைய வார்டின் வளர்ச்சிக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தருவார் என்று கடந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழக அரசு கூறியது.

அக்டோபர் மாதம் 1996ம் ஆண்டு தான் முதல்முறையாக நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள், 74வது அரசியலமைப்பு சட்டத்தின் திருத்தத்திற்கு பிறகு நடைபெற்றது. அப்போது திமுக நேரடியான தேர்தல் முறை வேண்டும் என்றும் மக்கள் யாரை மேயராக தேர்வு செய்ய விரும்புகிறார்கள் என்பதை அறிவிக்க அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். 23 வருடங்கள் கழித்து சென்னைக்கு மேயர் கிடைத்தார். திமுக சார்பில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மேயராக முக ஸ்டாலின் பொறுப்பு வகித்தார். 2001ம் ஆண்டு அவருடைய பதவி முடிவுற்றது. மீண்டும் அவர் தேர்வு செய்யப்பட்டார். 2006ம் ஆண்டு மீண்டும் நேரடி தேர்தல் முறையை ரத்து செய்து அறிவித்தது அன்றைய அதிமுக அரசு. மீண்டும் 2011ம் ஆண்டு நேரடி தேர்தல் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் படிக்க : சென்னை மேயர் பதவியை தலித்துகளுக்கு ஒதுக்க கோரும் திருமாவளவன்; பின்னணி என்ன?

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment