மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜுலை 17-ஆம் தேதி தொடங்கும் சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது. நேற்று நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில், இந்த கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் வரும் ஜூன் 27-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்றும், ஜுலை 7-ஆம் தேதியோடு விண்ணப்ப விநியோகம் நிறைவுபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜுலை 8 கடைசி நாள். ஜூலை 14-ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.