வைகோ மீதான தேசத் துரோக வழக்கில் ஜூலை 5ம் தேதி தீர்ப்பு – சென்னை ஐகோர்ட்

'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்

By: Published: June 19, 2019, 6:54:39 PM

2009ஆம் ஆண்டு மதிமுக பொது செயலாளர் வைகோ மீது பதிவான தேச துரோக வழக்கின் மீதான தீர்ப்பு ஜூலை 5 ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ராணி சீதை மன்றத்தில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியது இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததால், வைகோ மீது தேச துரோக வழக்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினர் தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.

அதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் வைகோ நேரில் ஆஜராகி வருகிறார்.

குற்றச்சாட்டு பதிவு, அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் சாட்சி விசாரணை, சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தல் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை 5ஆம் தேதி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Mdmk chief vaiko chennai high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X