Advertisment

தமிழகத்தில் துவங்கியது மருத்துவ கலந்தாய்வு; “EWS இடஒதுக்கீடு” தீர்ப்பிற்கு பிறகே தரவரிசை பட்டியல்

2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி அன்றுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். ஆஃப்லைனில் விண்ணப்பங்களை ஜனவரி 10, 2022க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
Medical admission process begins in TN

மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் (File)

Medical admission process begins in TN : தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள 11 கல்லூரிகளில் உள்ள 1450 இடங்கள் உட்பட தமிழகத்தில் உள்ள 6958 மருத்துவப் படிப்பிற்கான இடங்களுக்கு மாணவர் சேர்க்கை ஞாயிறு முதல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க 8833 விண்ணப்பங்களை மருத்துவப் படிப்பு இயக்குநரகம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல் மருத்துவத்திற்கு 1925 இடங்கள் தமிழகத்தில் உள்ளன.

Advertisment

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பிறகே தமிழகத்தில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்லூரி இயக்குநர், மருத்துவர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.

Do or Die அல்ல, Do and die… முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன புதுமொழி

விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, தரவரிசைப் பட்டியலை வெளியிட தயார் நிலையில் இருப்போம். இருப்பினும், நீதித்துறை உத்தரவுக்காக காத்திருப்பதால், அரசு மற்றும் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி, சட்ட மற்றும் நீதித்துறை கோணங்களில் ஆய்வு செய்வோம் என்றும் நாராயண பாபு தெரிவித்துள்ளதாக டி.டி.நெக்ஸ்ட்.இன் தங்களின் செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளது.

குடும்ப நலத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnhealth.tn.gov.in-ல் மருத்துவப் படிப்பில் சேர்க்கை விண்ணப்ப பக்கத்தில் பதிவு செய்யும் போது மாணவர்கள் பல தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்தனர். இணையம் புழக்கத்திற்கு வந்தவுடன் லாக்-இன் செய்ய முயன்றதால் அந்த தடங்கல்கள் ஏற்பட்டதாகவும் பிறகு சுமூகமாக இணையம் செயல்படத் துவங்கியது என்றும் அதிகாரிகள் கூறினர். 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி அன்றுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். ஆஃப்லைனில் விண்ணப்பங்களை ஜனவரி 10, 2022க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment