நடிகர் விஜய்யின், “ப்ரண்ட்ஸ்” படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர், 2011ஆம் ஆண்டு இயக்குனர் சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டார் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எனினும் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், ஆக.25ஆம் தேதி சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் இந்த விசாரணையை நடத்தினார். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததாக கூறப்பட்டன.
மேலும், சீமான் தொடர்பான அரை நிர்வாண வீடியோக்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று சோதனை நடத்தப்பட்டது.
இந்த மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
முன்னதாக நடிகை விஜயலட்சுமி திருவள்ளுவர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“