Advertisment

பிரபல சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார் மரணம் : பிரபலங்கள் அஞ்சலி

Siddha Doctor Sivaraj Sivakumar : உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார் இன்று காலமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிரபல சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார் மரணம் : பிரபலங்கள் அஞ்சலி

Siddha Doctor Sivaraj Sivakumar : கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த  பிரபல சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் இன்று காலமானார்.

Advertisment

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம், 7 தலைமுறைகளாக கடந்த 206 வருடங்களாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்துள்ளனர். இதில் இன்றை இளைஞர்களை அதிகம் பாதிக்கும், ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி மற்றும் இல்லற பிரச்சினைகளுக்கு, சித்த மருத்துவம் மூலம் தீர்வு கொடுத்து வந்தார். இது தொடர்பாக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கி மக்களின் சந்தேகங்களுக்கு தீர்வு அளித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் சிவகுமார், சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு உயிரிழந்துள்ளார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிவதாபுரத்திலுள்ள, அவரின் பூர்விகமான அகஸ்தியர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலை அவரின் உடல் நல்லடக்கம் நடைபெறஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment