Advertisment

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 3-வது முறையாக ஐ.டி. விசாரணை : கைது ஆவாரா?

விஜயபாஸ்கரின் குவாரி அமைந்துள்ள 100 ஏக்கர் நிலம் மற்றும் இதர சொத்துகள் முடக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijaya Baskar

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 3-வது முறையாக நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலா புதுக்கோட்டையிலிருந்து, விருதுநகர் மாவட்ட பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரி உள்பட சொத்துகளை முடக்க வேண்டும் என வருமானவரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ஆளும் கட்சியினர் தரப்பில் கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களா, எழும்பூரில் உள்ள சகோதரி வீடு உள்ளிட்ட அவருடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் வீடு மற்றும் அலுவலகம், மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா கல்வி நிறுவனங்கள், திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரி ஆகிய இடங்களும தப்பவில்லை.

மேலும், இலுப்பூர் வீடு, கல்வி நிறுவனங்கள், குவாரி ஆகிய இடங்களில் நடைபெற்ற  சோதனையின்போது முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த விவகாரம் தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் அவ்வப்போது விசாரணைக்கு ஆஜராகி வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், விஜயபாஸ்கரின் திருவேங்கைவாசல் குவாரி அமைந்துள்ள 100 ஏக்கர் நிலம் மற்றும் இதர சொத்துகள் முடக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து விஜயபாஸ்கர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவரிடம், குட்கா மற்றும் சேகர் ரெட்டியுடன் உள்ள தொடர்பு குறித்தும், ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சொத்துகள் எந்த ஆண்டில் வாங்கப்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது.

இந்த விசாரணைக்குப் பின்னர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன். புதுக்கோட்டையில் 120 கல் குவாரிகள் செயல்படுகின்றன. இதில் என்னுடைய கல்குவாரியும் இருக்கிறது. என்னுடைய கல் குவாரியில் சுப்பையா என்பவர் சப்-காண்ட்ராக்டராக இருக்கிறார். அவர் எனது வீட்டு சமையல்காரர் அல்ல. சுப்பையா ஒரு தொழிலதிபர், அவர் தன்னுடைய தொழிலுக்கு முறையாக வருமானவரி கட்டி வருபவர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோல தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். என்னுடைய கல் குவாரிகள் உரிய அனுமதி பெற்று தான் செயல்பட்டு வருகிறது.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் வருவது வழக்கமானது தான். இதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன். குட்கா விவகாரத்தில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். சட்டமன்றத்திலும் இது தொடர்பாக நான் உரிய விளக்கம் அளித்திருக்கிறேன். வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சரியான முறையில் விளக்கம் அளித்துள்ளேன். இவற்றையெல்லாம் நான் சட்டப்படி எதிர்கொண்டு குற்றமற்றவன் என நிரூபித்து காட்டுவேன் என்று கூறினார்.

விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் நேற்று மதியம், ஆஜராகி விளக்கம் அளித்தார். விஜயபாஸ்கர் மூன்று முறை வருமான வரித்துறை அதிகரிகள் முன்பு விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்த வழக்கை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்து கைது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே, அமலாக்கதுறையிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

Income Tax Department Income Tax Raid Minister C Vijayabaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment